Kidny

Kidny

கிந்தோட்டை முஸ்லிம் நபர் மீதான பிரச்சாரம்.. பகிரங்க மன்னிப்பு கேட்பதாக உறுதி.


கிந்தோட்டையில் ஏற் பட்ட அமைதியின்மை தொடர்பில் கைது செய்யப் பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் சந்தேக நபர் ஒருவரை 'கசிப்பு ஹுசைன் என தொலைக் காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நேற்று முன்தினம் தவறான பிரசாரத்தை மேற்கொண்ட மைக்காக இன்றைய தினம்
அதே நிகழ்ச்சி மூலம் பகிரங்க மன்னிப்பு கோரப்படும் என குறித்த தொலைக்காட்சி நிறுவனம் (தெரண) உறுதியளித்துள்ளது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் குறித்த தொலைக்காட்சி நிறுவனத்தின் பணிப்பாளரைத் தொடர்பு கொண்டு இது தொடர்பான தமது அதிருப்தியை முன்வைத்தததைத் தொடர்ந்து இன்று புதன்கிழமை காலை குறித்த நிகழ்ச்சியில் மன்னிப்புக் கோரி தவறை திருத்திக் கொள்வதாக அந்நிறுவனம் உறுதிய ளித்துள்ளது.

சிங்கள பத்திரிகை ஒன்றில் வெளியிடப்பட்ட செய்தியை தவறாகப் புரிந்து கொண்டு சந்தேக நபர் தொடர்பில் தவறான அபிப் பிராயத்தை உருவாக்கும் வகையில் பத்திரிகைக் கண்னோட்டநிகழ்ச்சியை நடாத்திய ஊடக வியலாளர் கருத்து வெளியிட்டிருந்தார்.

இதன் மூலம் குறித்த நபரின் குடும்பத்திற்கும் பிரதேசத்திற்கும் சமூ கத்திற்கும் பெருத்த சங்கடம் ஏற்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் சம்பந் தப்பட்ட தொலைக் காட்சி நிறுவனமும் ஊடகவியலாளரும் பகிரங்கமாக மன் னிப்புக் கோர வேண்டும் என பல் வேறு தரப்புகளும் கோரிக்கை விடுத்தி ருந்தன.


ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்திடமும் இது தொடர்பில் முறைப்பாடுகள் முன்வைக்கப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிந்தோட்டை முஸ்லிம் நபர் மீதான பிரச்சாரம்.. பகிரங்க மன்னிப்பு கேட்பதாக உறுதி. கிந்தோட்டை முஸ்லிம் நபர் மீதான பிரச்சாரம்.. பகிரங்க  மன்னிப்பு கேட்பதாக உறுதி. Reviewed by Madawala News on 11/22/2017 12:12:00 PM Rating: 5