Kidny

Kidny

கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரி முன்னாள் அதிபருக்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்கு தள்ளுபடி ..



கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரியின் முன்னாள் அதிபருக்கு எதிராக தொடர்பட்ட வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.


இந்த வழக்கில் பிரதிவாதி சார்பாக ஆஜரான சட்டத்தரணி ஷஹீட் அவர்களிடம் தொடர்ப்புகொண்டு கேட்டபோது,


கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரி முன்னாள் அதிபர் ஹஜர்ஜஹான் மன்சூர் அவர்களுக்கு எதிராக 2014 ம் வருடம் நிதி முறைகோடு தொடர்பில்  பெற்றோர்கள் சிலரால் தொடரப்பட்டிருந்த வழக்கு இன்று உச்ச நிதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.


முன்னாள் அதிபருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத நிலையில் அவருக்கு எதிராக எட்டு பெற்றோர்களால் தொடரப்பட்டிருந்த இந்த வழக்கை இன்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.




கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரி முன்னாள் அதிபருக்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்கு தள்ளுபடி ..  கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரி முன்னாள் அதிபருக்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்கு தள்ளுபடி .. Reviewed by Madawala News on 11/22/2017 06:07:00 PM Rating: 5