Kidny

Kidny

லங்கா ஈ நியுஸ் இலங்கையில் தடை !!


லங்கா நியுஸ் இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ காலத்தில்  குறித்த இணையதளம் இலங்கையில் தடை செய்யப்பட்டிருந்த அதேவேளை தற்போது அந்த இணையதளம் இன்று மாலை முதல் இலங்கையில்
தடை செய்யப்பட்டுள்ளதாக குறித்த இணையதளம் அறிவித்துள்ளது.

கடந்த அரசாங்க காலத்தில் லங்கா நியுஸ் ஆசிரியர் எக்டெலிகொட கடத்தப்பட்டிருந்த அதேவேளை குறித்த இணையதளம் இலங்கையில் தடை செய்யப்பட்டிருந்தது.

இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி சில வெளிநாட்டில் இருந்து இயங்கும் இணையதளங்கள் பணம் பெற்றுக்கொண்டு தனக்கு எதிராக சேறு பூசுவதாக குறிப்பிட்டிருந்தார்.
லங்கா ஈ நியுஸ் இலங்கையில் தடை !!  லங்கா ஈ நியுஸ் இலங்கையில் தடை !! Reviewed by Madawala News on 11/09/2017 12:11:00 AM Rating: 5