Kidny

Kidny

நாடளாவிய ரீதியில் கலவரங்களை ஏற்படுத்துவோர் பற்றிய விபரங்கள் எம்மிடம் உள்ளன..


நாடளாவிய ரீதியில் கலவரங்களை ஏற்படுத்துவோர் பற்றிய விபரங்கள் தம்மிடம் உண்டு என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

தன் வசம் உள்ள தகவல்களை வெளியிட்டால் பாரிய முரண்பாடுகள் நாடளாவிய ரீதியல் வெடிக்கக்கூடிய அபாயம் காணப்படுகின்றது.

கிங்தொட்ட மற்றும் அழுத்கமவில் ஏற்பட்ட சம்பவங்கள் தொடர்பில் எம்வசம் தகவல்கள் உள்ளது எனவும் ஆணைக்குழு நிறுவப்பட்டால் அது தொடர்பான விபரங்களை ஒப்படைக்கவும் தாம் தயாராக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


இந்த நாட்டில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பிரதேசங்களில் சிங்களவர்கள் அடி வாங்குவதாக குறிப்பிட்டுள்ள அவர் அலுத்கமை கலவரத்தில் சிங்களவர்களுக்கே அதிகமாக சேதம் ஏற்பட்டதாகவும் ஆனால் வெளி உலகுக்கு விடயம் வேறு மாதிரியாக சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நாடளாவிய ரீதியில் கலவரங்களை ஏற்படுத்துவோர் பற்றிய விபரங்கள் எம்மிடம் உள்ளன..  நாடளாவிய ரீதியில் கலவரங்களை ஏற்படுத்துவோர் பற்றிய விபரங்கள் எம்மிடம் உள்ளன.. Reviewed by Madawala News on 11/22/2017 02:14:00 PM Rating: 5