Kidny

Kidny

முருத்தொட்டுவே ஆனந்த தேரர் எச்சரிக்கை ..


ஆளுங்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் மஹிந்த ராஜபக்ஸ இணைவாராயின்,அவருக்கு மகாசங்கத்தினரின் ஆதரவு கிடைக்காது" என தாய்நாட்டை பாதுகாக்கும் தேசிய அமைப்பின்  தலைவர் முருத்தொட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

நாரஹேன்பிட்டிஅபயராம விகாரையில் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


“ தமது அமைப்பு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடன் இருப்பதாகவும்,எனவே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைச்சர்களுடன்  கலந்துரையாட மஹிந்த திட்டமிட்டுள்ளதை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.


“அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்ளும் ​ஆசையில் சில உறுப்பினர்கள் கூட்டு எதிரணியில் இருப்பதாகவும், இவர்களே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன்  இணைவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும்,எனவே மஹிந்த ராஜபக்ஸ இவர்களின் அபிப்ராயங்களுக்கு செவிமடுக்காமல் மகாசங்கத்தினரை நம்புவதாகவும்” ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

முருத்தொட்டுவே ஆனந்த தேரர் எச்சரிக்கை ..  முருத்தொட்டுவே ஆனந்த தேரர்  எச்சரிக்கை .. Reviewed by Madawala News on 11/28/2017 03:17:00 PM Rating: 5