Kidny

Kidny

மஹிந்த மைதிரி அணிகள் இணையும் வரை தேர்தல் இடம்பெற வாய்ப்பில்லை ..


மஹிந்த மைதிரி அணிகள் இணையும் வரை தேர்தல் ஒன்று நடைபெறுவதற்கான  வாய்ப்புகள்
மிக அறிதாகவே காணப்படுவதாக கொழும்பு அரசியல் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்ட, வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக, அறிவிக்கக் கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

கொழும்பு, கண்டி, சாலிஎல, மாத்தறை எம்பிலிபிடிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்த அறுவர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்

இந்த நிலையில் உள்ளூராட்சி தேர்தல் மேலும் பிற்போடப்படும் என தெரியவரும் அதேவேளை மஹிந்த அணியை எதிர்வரும் தேர்தலில் சுதந்திரக்கட்சியில் இணைத்துக்கொள்ள சுதந்திர கட்சி முக்கியஸ்தர்கள் சிலர் கடும் முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த சிலர் தனக்கு எதிராக செயற்படுவதாக ஜனாதிபதி வெளிப்படையாகவே கூறியுள்ள நிலையில் இரு தரப்பு உறவில் விரிசல் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மஹிந்த மைதிரி அணிகள் இணையும் வரை தேர்தல் இடம்பெற வாய்ப்பில்லை ..  மஹிந்த மைதிரி அணிகள் இணையும் வரை தேர்தல் இடம்பெற வாய்ப்பில்லை .. Reviewed by Madawala News on 11/15/2017 11:40:00 PM Rating: 5