Kidny

Kidny

விடுதலை புலிகளை கொண்டாடும் அனைவரும் தீவிரவாதிகளாகவே கருதப்படுவர்..


யாராவது தனி நபர் அல்லது ஒரு குழு விடுதலை புலிகளுக்கு நினைவு தினம் நடத்துவார்களாக இருந்தால் விடுதலை புலிகள் மேற்கொண்ட சகல கொலைகளையும் அவர்களே பொறுப்பேற்க வேண்டும் என பாடலி சம்பிக ரனவக குறிப்பிட்டுள்ளார்.


இன்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் மேற்கணடவாறு குறிப்பிட்டார்.


அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர் ,


விடுதலை புலிகள் இயக்கமானது இந்த நாட்டில் மக்களை நடு வீதியில் கொன்று குவித்த ஒரு பயங்கரவாத இயக்கமாகும்.


விடுதலை புலிகளை கொண்டாடும் அனைவரும் அவர்களை சேர்ந்தவர்கள்.பயங்கரவாதிகளை எவரும் வீரர்களாக சித்தரிக்க முயற்சிக்க கூடாது.


யாராவது தனி நபர் அல்லது ஒரு குழு விடுதலை புலிகளுக்கு நினைவு தினம் நடத்துவார்களாக இருந்தால் விடுதலை புலிகள் மேற்கொண்ட சகல கொலைகளையும் அவர்களே பொறுப்பேற்க வேண்டும்.


தீவிரவாதிகளை கொண்டாடும் அனைவரும் தீவிரவாதிகளாகவே கருதப்படுவார்கள் என பாடலி சம்பிக ரனவக குறிப்பிட்டுள்ளார்.


சிவாஜி லிங்கம் போன்றவர்கள் மீண்டும் தீவிரவாதிகளை தூக்கிப்பிடித்துகொண்டு முன்னே வருவார்களாக இருந்தால் அவர்களுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


விடுதலை புலிகளை கொண்டாடும் அனைவரும் தீவிரவாதிகளாகவே கருதப்படுவர்..  விடுதலை புலிகளை கொண்டாடும் அனைவரும் தீவிரவாதிகளாகவே கருதப்படுவர்.. Reviewed by Madawala News on 11/27/2017 08:43:00 PM Rating: 5