Kidny

Kidny

கிந்தொட்டை பிரதேசத்திற்கு உச்சக்கட்ட பாதுகாப்பு ! நிலமை பூரண கட்டுபாட்டிற்கு வந்தது ..




கிந்தொட்டயில் ஏற்பட்ட இன முறுகளில் பெரும்பான்மையினத்தவர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி
பல வீடுகள் சேதமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிந்தொட்ட பிரதேசத்திற்கு வெளிப் பிரதேசத்திலிருந்து வருகை தந்த கும்பலொன்று  இன்று (17) இரவு அங்கிருந்த கடைகள் மற்றும் வீடுகள் என்பவற்றின் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போது அங்கு நிலமை பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அரச உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அங்குள்ள மக்களின்  பாதுகாப்பு தொடர்பில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர்கள் ரிஷாத் பதியுதீன், பைஸர் முஸ்தபா , ஹிஸ்புல்லாஹ் பா உறுப்பினர்கள் எஸ் எம் மரிக்கார்,முஜீபுர் ரஹ்மான் உள்ளிட்டவர்கள் மடவளை நியுசுக்கு குறிப்பிட்டனர்.

அதே நேரம் அமைச்சர் பைஸர் முஸ்தபா மற்றும் பா உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் ஆகியோர் ஸ்தலத்திற்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிந்தொட்டை பிரதேசத்திற்கு உச்சக்கட்ட பாதுகாப்பு ! நிலமை பூரண கட்டுபாட்டிற்கு வந்தது .. கிந்தொட்டை பிரதேசத்திற்கு உச்சக்கட்ட பாதுகாப்பு ! நிலமை பூரண கட்டுபாட்டிற்கு வந்தது .. Reviewed by Madawala News on 11/18/2017 12:51:00 AM Rating: 5