Ad Space Available here

பின்னூரியின் கருத்து சமூகத்தை சீரழிக்கக் கூடியது.!

பின்னூரியின் கருத்து சமூகத்தை சீரழிக்கக் கூடியது.!  
செயலாளர் மலையக முஸ்லிம் கவுன்சில்


பின்நூரியின் மேற்படி சர்சைமிகு கருத்துக்கள் சம்பந்தமாக மலையக முஸ்லிம் கவுன்சில் செயலாளர் எம் பி செய்யது முஹம்மது விடம் வினவிய போது ' இன்று ஊவா முஸ்லிம் சமூகமான நாம் கல்வியில் மிகவும் பின்னடைந்த நிலையில் இருக்கின்றோம். எங்களுக்கான காத்திரமான அரசியல் தலைமைத்துவம் ஒன்றில்லாமல் எமது பாடசாலைகள் பலவழிகளில் புறக்கணிப்புகளுக்கு முகங் கொடுத்து நிற்கின்றது.

உரிய பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாமலும் போதிய வளங்கள் இல்லாமலும் எமது பிள்ளைகளின்  கல்வி முன்னேற்றத்திற்காக பல வழிகளில் போராடிக் கொண்டிருக்கின்றோம். போதிய பலம் இல்லாமல் போராடும் எமக்கு தொடர்ந்தும் பல கசப்பான பெறுபேறுகளே கிடைக்கப் பெறுகின்றன. அந்தவகையில் இந்த அட்டவணையிலுள்ள தகவல்களை பாருங்கள் ' என்று கூறி ஒரு அட்டவனையை காட்டுகின்றார்.


2016 ஆண்டு அனைத்து பல்கலைகழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தால் தயாரிக்கப் பட்ட இந்த அட்டவணையின் தகவல்களின் படி 2015 ஆண்டின் பல்கலைக் கழக அனுமதிகளில் ஊவா மாகாணமே பின்தங்கிய நிலையில் உள்ளது. அனைத்து துறைகளுக்கும் வெறும் 32 பேர் மாத்திரமே ஊவாவில் இருந்து பல்கலைக் கழகம் தெரிவாகியுள்ளனர். வைத்திய பொறியியல் துறைக்கு எவருமே முஸ்லிம்களில் தெரிவாக வில்லை. இவரின் கூற்றுப் படி பிள்ளைகளை படிக்க விடாது நாற்பது நாட்களில் வைத்தியம் கற்க வைக்கலாம் என்று கூறி மக்களை வழிக் கெடுப்பது எமது சமூகத்தை மேலும் சீரழிக்கக் கூடிய  மிகவும் ஆபத்தான கருத்துக்களாகும்

ஆகவே இவரின் இந்த மௌட்டீக கருத்துக்களுக்கு எதிராக உரியவர்கள் தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்' என்றும் மேலும் தெரிவித்தார்.

நுஸ்ரான் பின்நூரி ஞானசாரவை விட ஆபத்தானவர் !முஹம்மது  இல்லியாஸ் ' டோர்நேஷன் ' அமைப்பு பண்டாரவெளை.    

பதுளை மாவட்ட முஸ்லிம் கல்வி முன்னேற்றத்தை மையமாக கொண்டு பண்டாரவெளை பிரதேசத்தில் இயங்கிவரும் சமூக நல தொண்டு நிறுவனமான 'டோர்நேஷன் ' அமைப்பின் நிர்வாக உறுப்பினர்  மொஹம்மத் இல்லியாஸ் அவர்களிடம் இது சம்பந்தமாக வினவிய போதுஇ ' இன்று பதுளை பண்டாரவளை வெளிமட போன்ற பகுதிளில் முஸ்லிம் கல்வி மறுமலர்ச்சிக்காக பல அமைப்புகள் பாரிய பங்களிப்பு செய்து வருகின்றன

தமது பிள்ளைகளை கற்பிப்பதில் பெற்றார்கள் பாரிய கவனஞ் செலுத்த ஆரம்பித்துள்ளர்கள். அத்துடன் யூசுப் முப்தி அவர்களின் ஒத்துழைப்புடன் எமது டோர்நேஷன் அமைப்பு பல கல்வி அபிவிருத்தி திட்டங்களை மாகாணம் எங்கும் முன்னெடுத்து வருகின்றோம்

இந்த நேரத்தில் நுஸ்ரான் பின்நூரி என்பவர் இவ்வாறான விஷக் கருத்துக்களை பகிரங்க ஜும்மாவில் தெரிவித்தது அதுவும்  பண்டாரவளையில் வைத்து இவ்வாறு தெரிவித்தது மிகவும் கண்டிக்கத்தக்க தொரு விடயம். இது போன்ற கருத்துக்கள் எமது சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானவை. உண்மையில் ஞான சார போன்றவர்கள் ஆபத்தனவர்களல்ல

இவர்கள் தான் ஆபத்தானவர்.ஆகவே இவரின் சர்ச்சைக்குரிய  கூற்றுக்கள் சம்பந்தமாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா ஒரு பகிரங்க ஊடக மாநாட்டின் மூலம் தெளிவான விளக்கத்தை மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும். இல்லா விட்டால் இன்று பண்டாரவலையில் நிகழ்ந்த இந்த விடயம் நாளை இன்னொரு பிரதேசத்தில் நடக்கக் கூடும்.' என்று கருத்து தெரிவித்தர்.

பின்நூரியின் கருத்தால் பெண்கள் தொழிலுக்காக வெளிநாடு செல்லும் விகிதம் மேலும் அதிகரிக்கும் ! ஆண்களும் வருமானத்திற்காக தமது மனைவி மார்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிக் கொண்டே இருப்பார்கள்.

                       
டாக்டர் எம் எச் சலாஹுதீன் பொது வைத்திய சாலை கண்டி

அடுத்ததாக ஊவா முஸ்லிம் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் தலைவரும் கண்டி பொது வைத்திய சாலையின் அவசர சிகிச்சை பிரிவின் பொறுப்பாளருமான  டாக்டர் எம் எச் சலாஹுதீன் அவர்களிடம் இது சம்பந்தமாக கருத்து கேட்ட போதுஇ ' இன்று நங்கள் எமது சமூகத்தை கல்வியின் பக்கம் போகவிடாது தடுப்போமேயானால் பெண்கள் தமது தொழில் வாய்ப்புக்களுக்காக வெளிநாடு செல்லும் விகிதம் மேலும் அதிகரிக்கும். அதே போல் தொழில் வாய்பில்லாத ஆண்களும் தமது மனைவி மார்களை சம்பாத்தியத்திற்காக வெளிநாடுகளுக்கே அனுப்பும் விகிதமும் மேலும் அதிகரிக்கும். ஆகவே எமது சமூகத்தை வருமையிலிருந்து பாதுகாக்கவும் இன்றைய நவீன சவால்களுக்கு முகங் கொடுக்கவும் எதிர்கால சந்ததிகளை தயார் படுத்துவதென்றால் கல்வி கற்பிப்பதே ஒரே வழி. இஸ்லாமும் இதையே வலியுறுத்துகின்றது

மார்க்கக் கல்வி பொதுக் கல்வி என்று இஸ்லாம் பிரித்து கூறுவதை நான் எங்கேயும் காணவில்லை. எமது சமூகத்திற்கு இன்று தேவையானது பிரயோசனமிக்க கல்வியே. அதை இவ்வாறு பிம்மர் மேடைகளிலிருந்து தடுக்க முயற்சிப்பது மிகவும் கவலைக்குரிதாகும்.' என்று தெரிவித்தார்

வெள்ளி மேடைகளில் உரை நிகழ்த்துபவர்கள் அறிவு சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். இலங்கையிலுள்ள அனைத்து ஜும்மா உரைகளும் ஜம்மியத்துல் உலமாவால் முறையாக நெறிப்படுத்தப் படல் வேண்டும் !

                                  
/ராசிக் பரீத் மா வி அதிபர் எம் சி எம் முனவ்வர் !

இதுவிடயமாக /ராசிக் பரீத் வி அதிபரும் உமேடா வின் உதவிப் பொருளாளருமான எம் சீ எம் முனவ்வர் அவர்களிடம் கருத்துக் கேட்ட போது' இந்த பிரதேசத்து முஸ்லிம் கல்வியின் உயிர்நாடியாக உள்ள /ராசிக் பரீத் வி யின் அதிபர் என்ற வகையில் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களால் பெரிது அசௌகரியங்களுக்கு உள்ளானேன். ஏற்கனவே கல்வியில் பல சவால்களை எதிர்கொண்டுள்ள எம் சமூகம் இவ்வாறான உரைகளால் மேலும் நூறு வருடங்களுக்கு மேல் பின்தள்ளப் படுவோம்

குத்பா உரைகளை நிகழ்த்துபவர்கள் அறிவு சார்ந்தவர்களாகவும் உலக நடப்புகளில் அவதானம் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்.இந்த நெறிபடுத்தலை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவே மேற்கொள்ள வேண்டும்.'என்றும் தெரிவித்தார்.  
பின்னூரியின் கருத்து சமூகத்தை சீரழிக்கக் கூடியது.!  பின்னூரியின் கருத்து சமூகத்தை சீரழிக்கக் கூடியது.!  Reviewed by Madawala News on 11/09/2017 11:36:00 PM Rating: 5