Yahya

அதிகாரப் பகிர்வு என்பது வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கோ அல்லது வேறு மாகாணத்திற்கோ கூடுதல் அதிகாரத்தை வழங்குவது அல்ல.


அதிகாரப் பகிர்வு என்பது வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கோ அல்லது வேறு மாகாணத்திற்கோ கூடுதல் அதிகாரத்தை
வழங்குவது அல்ல.

அதிகாரப் பகிர்வு என்பது நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதாகும் என்று தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகருமமொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்;வில் கலந்துகொண்டு அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டில் உள்ள 9 மாகாணங்களுக்கும் அதிகாரத்தை பகிர்ந்தளிக்க வேண்டும். பெரும்பாண்மை மக்களிடம் உள்ள அதிகாரங்களை தமிழ், முஸ்லிம் மக்களுக்கு பெற்றுக் கொடுக்கப் போவதாக நாட்டில் தவறான ஒரு கருத்து நிலவுகின்றது.இதில் எந்த உண்மையும் இல்லையென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்தல், அதிகாரங்களை பகிர்ந்தளித்தல், தற்போதைய தேர்தல் முறையை மாற்றியமைத்தல் ஆகிய மூன்று விடயங்கள் தொடர்பில் புதிய அரசியல் அமைப்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென்றும் அமைச்சர் மனோ கணேசன் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
அதிகாரப் பகிர்வு என்பது வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கோ அல்லது வேறு மாகாணத்திற்கோ கூடுதல் அதிகாரத்தை வழங்குவது அல்ல.  அதிகாரப் பகிர்வு என்பது வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கோ அல்லது வேறு மாகாணத்திற்கோ கூடுதல் அதிகாரத்தை வழங்குவது அல்ல. Reviewed by Madawala News on 11/13/2017 03:03:00 PM Rating: 5