Kidny

Kidny

அடுத்த பாகம் வரும் வரை...


சம்பிக்க ரணவக்கவின்அல் ஜிஹாத் அல் கைதாநூலிலிருந்து 


அடுத்த பாகம் வரும் வரை
எம் எம் முஸம்மில் – (BA Hons)- பதுளை .   

சம்பிக்க ரணவக்கவின்அல் ஜிஹாத் அல் கைதாநூலிலிருந்து சில முக்கிய குறிப்புகளை மொழிபெயர்த்து வெளியிடும் இத்தொடர்பற்றி பலர் என்னுடன்  தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமதுகருத்துக்களை ஆதரவாக தெரிவித்து சில ஆலோசனைகளையும் முன்வைக்கின்றார்கள்

அதேவேளை இன்னொரு சகோதரர் இந்தத் தொடரை உடனடியாக நிறுத்தும் படியும் இந்த தொடர் ஆளும் நல்லாட்சி அரசாங்கத்திற்கு சில அசௌகரியங்களை ஏற்படுத்தும் என்றும்இது  முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்ட கடந்த ஆட்சியை அல்லது  மஹிந்தவை நியாயப் படுத்தும் நிலையை ஏற்படுத்தும் என்றும் கூறியதுடன் , “ தற்போதைய ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக சில அசம்பாவிதங்கள் நடைபெற்றாலும் மஹிந்தவின் காலத்தில் போல் அந்தளவு  பாரதூரமாக எதுவும் நடக்கவில்லையே என்று தமது பக்க நியாயங்களை எடுத்துக் கூறினார்

( இவரின் உபதேசத்திற்கு இரண்டு நாட்களுக்கு பிறகு காலி கிந்தோட்டை முஸ்லிம்களுக்கு எதிரான  திட்டமிட்ட வன்முறைகள் நடந்தேறின என்பது குறிப்பிடத்தக்கது.)

இவர் போன்ற கருத்துடையவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது , மகிந்த எனக்கு மாமாவுமில்லை ரணில் எனக்கு மச்சானுமில்லை. எனது முயற்சியும் முனைப்பும் இந்த அழகிய நாட்டை தமது ஆதிக்க வெறியால் பிணக்காடாக மாற்றி  ஆட்சி செய்ய துடிக்கும் ஒரு இரத்தக் காட்டேறியின் அரசியல் நகர்வுகள் பற்றி நம் சமூகம் அறிந்திடச் செய்வதாகும்

இனவாத அரசியலையே மூலதனமாக கொண்டு மூன்று இலட்ச முஸ்லிம்களின் மையத்துகளின் மேல் நடந்து சென்று  குஜராத்  முதல்வராக  நுழைந்து  பிராந்திய அரசியலிலிருந்து  இன்று இந்திய பிரதமராக ஒரு மதச்சார்பற்ற நாட்டை ஆளும் இந்துத்துவா அடிப்படைவாதியான மோடியின் அரசியல் நகர்வுகளுக்கு எந்தளவு இனவாத அரசியல் சாதகமாக அமைந்ததோ அதேபாணியிலான அரசியல் நகர்வுகளில் இன்று இந்த சம்பிக்க ரணவக்க அடி எடுத்துச் செல்வதை அரசியலில் அரிச்சுவடி தெரிந்தவர்களும் அறிந்துகொள்வார்கள்.  

இந்திய அரசியலை  தீர்மானிக்கும் சக்தியாக செயற்பட்ட இந்துத்துவா அமைப்புகளான சிவசேனா , ஆர் எஸ் எஸ் , பஜ்ராங்க்தல், போன்ற அமைப்புகள் எவ்வாறு  அரச ஆதரவுடன் செயற்பட்டு  பாபரி மஸ்ஜித் தகர்ப்பு முதல் இந்திய முஸ்லிம்களின் உயிர்களையும் உடமைகளையும் சூறையாடி முஸ்லிம்கள் இந்தியக் குடிகளல்ல அவர்கள் பாகிஸ்தானுக்கு விரட்டப் பட வேண்டியவர்கள் என்ற சிந்தனையை இந்தியர்களுக்கு மத்தியில் விதைத்து தமது செயற்பாடுகளுக்கு நியாயம் கற்பித்து  இந்துத்துவாவை ஆட்சி பீடம் ஏற்றினர்களோ !

இங்கு இலங்கையிலும்  அதே பாணியில் பொதுபல சேனா, சின்ஹலே , சின்ஹல வீர விதகன ராவணா பலய , போன்ற அமைப்புகள் முஸ்லிம் எதிர்ப்பு கோஷங்களுடன் தம்புள்ள மஸ்ஜித் தகர்ப்புடன் வீரியம் பெற்று இன்று முஸ்லிம்களின் உயிர் உடமைகளை சூறையாடி இந் நாட்டில் வாழும்  முஸ்லிம்கள் இந் நாட்டின் பூர்வீக குடிகளல்ல அவர்கள் சவூதி அரேபியாவுக்கு விரட்டப் படவேண்டியவர்கள் என்று கூறி  முஸ்லிம்பூர்வீகத்தை மறுப்பதும் அதற்கு சாதகமான பொய்யான தடயங்களை ஆவணங்களை உண்டுபண்ணுவதும் முஸ்லிம் மதத் தளங்கள் மீது தாக்குதல் தொடுப்பதும் தமது வன்முறைகளுக்கு நியாயம் கற்பித்து சட்டத்தின் மூலம் இவ் இனவெறியர்களை பாதுகாப்பதும்அளுத்கமை , கின்தொட்டை  என்று முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகளினூடாக  தமது பாதையில் தங்கு தடையின்றி முன்னேறிக்கொண்டிருக்கின்றார்கள் .       
        
இலங்கையின் அரசியல் வரலாற்றில் முஸ்லிம்களைப்பற்றி அவ்வப்போது மாற்று கருத்துக்கள் தெரிவித்து இனவாத அரசியல் செய்த பெரும்பான்மை அரசியல் தலைவர்களை நாம் கண்டுள்ளோம். அவை பெரும்பாலும் நேரடியான கருத்துக்களல்லாமல் மறைமுகமானதாகவோ அல்லது குறிப்பால் உணர்துவதாகவோ தான் இருந்திருக்கும் . ஆனால் ஒரு இனத்தை பற்றி பல அபாண்டங்களையும், வீண் பழிகளையும் , வரலாற்றுப் பொய்களையும் அவிழ்த்துவிட்டு அவற்றை எழுத்தில் வடித்து தமது வஞ்சகத்தை வெளிப்படுத்தி ஒரு சமூகத்தையே பிழையாக வழிநடத்தும் சம்பிக்க போன்ற வேறொரு அரசியல் தலைவரை நாம் இதுவரை காணவில்லை.
(அநகாரிக தர்மபால போன்றவர்கள் கூட சமய மறுமலர்ச்சி என்ற போர்வையில் இனவாத செயற்பாடுகளில் ஈடுபட்டார்களே தவிர  இந்த நாட்டின் நேரடி அரசியலில் ஈடுபட்டதாக நாம் அறியவில்லை). 

ஆகவே இன்ஷா அல்லாஹ் சம்பிக்க ரணவக்கவின்அல் ஜிஹாத் அல் கைதாநூலிலிருந்து தொடரும் .

குறிப்பு :-  இந்த மொழிபெயர்ப்பு பதிவுகள் , குறித்த பொய்களுக்கும் வரலாற்று திரிபுகளுக்கும் மறுப்புரைகள் அடங்கலான  ஒரு நூலாக வெளியிடப்  பட வேண்டுமென்ற யோசனையை இன்னுமொரு அன்பர் தெரிவித்திருந்தார்

இன்ஷா அல்லாஹ் இது சம்பந்தமாக சாதகமான சந்தர்ப்பம் அமையுமானால் அதற்காக முயற்சிக்கலாம். இது சம்பந்தமாக கருத்துப் பதிவிடும் வாசகர்கள் கருத்துக்களும் பின்னூட்டங்களும் குறித்த புத்தகத்தில் பதியப் படவுள்ளதால் வாசகர்கள் தமது காத்திரமான கருத்துக்களை பதிவு செய்யவும்
நன்றி
அடுத்த பாகம் வரும் வரை...  அடுத்த பாகம் வரும் வரை... Reviewed by Madawala News on 11/19/2017 01:21:00 PM Rating: 5