Kidny

Kidny

அரசை விட்டு சுதந்திர கட்சி வெளியேறினால் TNA உடன் இணைந்து UNP அரசாங்கம்


ஶ்ரீ லங்கா சுதந்திர் கட்சி அரசாங்கத்தை விட்டு வெளியேறினால் இலங்கை தமிழரசு கட்சியுடன் இணைந்து ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியமைக்கும் என ஐக்கிய தேசிய கட்சி வட்டாரங்களில் இருந்து செய்திகள் கசிந்துள்ளன.


ஐக்கிய தேசிய கட்சி சுதந்திர கட்சிகளுக்கு இடையேயான முறுகல் உச்சம் பெற்றுள்ள நிலையில் ,


ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை இணைக்கும் முயற்சியில் இரு தரப்பு குழுக்கள் மிகத்தீவிரமாக களமிறங்கியுள்ளது.


மஹிந்த அணியுடன் இணைவதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா கடும் அதிருப்தி வெளியிட்டு வரும் நிலையில் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் தற்போது மஹிந்த மைதிரி இணைவிற்க்கு பச்சை கொடி காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் தமக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதிப்படுத்தியுள்ளார்.


கடந்த வியாழக்கிழமை நான்கு முன்னணி தேரர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் அவர் இந்த தகவலை உறுதிசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கைதுசெய்வதற்கு தயாராகியுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பான நிலை குறித்து கேட்பதற்காக நாயக்க தேரர்கள் ஜனாதிபதியை சந்தித்திருந்தனர்.


இந்த கலந்துரையாடலின்போது, ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து தேரர்களுக்கு ஜனாதிபதி விளக்கமளித்துள்ளதுடன், தனக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் அண்மையில் சந்திப்பொன்று இடம்பெற்றதை வெளிப்படுத்தியுள்ளார்.


அதன்போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலம் தொடர்பில் நீண்ட சுமூக பேச்சுவார்ததை இடம்பெற்றதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சந்திப்பு தொடர்பில் நாயக்க தேரரிடம் அவர் விளக்கமாக எடுத்து கூறியுள்ளார்.


இன்னாள் முன்னாள் ஜனாதிகளுக்கு இடையிலான இந்த சந்திப்பின் போது, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பங்குபற்றியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன


இந்த சந்திப்பு ஜனாதிபதியின் சகோதரர் வர்த்தகர் ட்டலி சிறிசேனவில் வீட்டில் இடம்பெற்றிருந்தாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


அரசை விட்டு சுதந்திர கட்சி வெளியேறினால் TNA உடன் இணைந்து UNP அரசாங்கம்  அரசை விட்டு சுதந்திர கட்சி வெளியேறினால் TNA உடன் இணைந்து UNP அரசாங்கம்  Reviewed by Madawala News on 11/25/2017 08:24:00 PM Rating: 5