Kidny

Kidny

பதுர்தீன் அதிகம் துள்ளுகிறார் , விரைவில் அவருக்கு சாப்பாடு கிடைக்கும் ..


கொழும்பில் இருந்து சென்ற முஸ்லிம் அரசியல் வாதிகளே பிரச்சினையை பூதாகரமாக்கியுள்ளனர்
என ஞானசார தேரர் கூறியுள்ளார்.

இராஜகிரிய நாவல வீதியில் அமைந்துள்ள பொதுபலசேனாவின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்தெரிவிக்கும் பேதே பொதுபலசேன அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர் ,

கொழும்பில் இருந்து சென்ற முஸ்லிம் அரசியல் வாதிகளே பிரச்சினையை பூதாகரமாக்கியுள்ளனர். பதுர்தீன் முஜிபுர் ரஹ்மான் போன்றவர்கள் அங்கு சென்றுள்ளதாக பிரச்சினை பூதாகரமாகியுள்ளது.

ரிஷாத் பதியுதீன் தற்போது அதிகம் துள்ளுகிறார். விரைவில் அவருக்கு நல்ல சாப்பாடு கிடைக்கும் அவர் யார் இந்த நாட்டில்  எனவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரம் முஸ்லிம் அரசியல் வாதிகள் இரவோடு வந்ததிருக்காவிட்டால் அரைவாசிக்கு மேல் எரிக்கப்பட்டிருக்கும் என கிந்த்தோட்டை பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.

கிந்தோட்டை முருகலின் போது அமைச்சர்கள் பைஸர் முஸ்தபா , ரிஷாத் பதியுத்தீன் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் அங்கு நள்ளிரவேடு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பதுர்தீன் அதிகம் துள்ளுகிறார் , விரைவில் அவருக்கு சாப்பாடு கிடைக்கும் ..  பதுர்தீன் அதிகம் துள்ளுகிறார் , விரைவில் அவருக்கு சாப்பாடு கிடைக்கும் .. Reviewed by Madawala News on 11/21/2017 07:47:00 PM Rating: 5