Ad Space Available here

“அல் ஜிஹாத் அல் கைதா” நூலாசிரியர் பாடலி சம்பிக்க ரனவக்க பற்றிய ஒர் சிறப்பு பார்வைஎம் எம் முஸம்மில்பதுளை.

சம்பிக ரணவக்க இன்றைய ஆளும் அரசாங்கத்தின் அச்சாணியாக கருதப்படக் கூடிய  மிக முக்கிய பாத்திரங்களுள் ஒருவராவார்.


2020 இலங்கையை ஒரு தூய பௌத்த நாடாக மாற்றி அதன் ஆட்சித் தலைமையை தமதாக்கி கொள்ளும் திட்டத்தை சுமார் 15 வருடங்களுக்கு முன்பே அமுல் நடத்த தொடங்கியவர்


இவ்விலக்கை அடைய நெடுந்தூரம் பயணித்து வரும் அவர் கால சூழலுக்கு ஏற்ப தமது அரசியல் கொள்கைகளையும் அவ்வப்போது மாற்றிக்கொண்டு பயணிப்பதை இவரின் அரசியல் பாதையை அவதானிப்பவர்களுக்கு விளங்கும்.


ஒரு பொறியியல் (எஞ்சினியர்) பட்டதாரியான இவர் ஆரம்ப களங்களில் இடதுசாரி அரசியலில் தீவிர ஈடுபாட்டளராக இருந்து பிறகு அநகாரிக தர்மபாலவின் கொள்கைகளால் கவரப் பட்டு  தீவிர சிங்கள தேசியவாத செயட்பாட்டாளராக மாறினார். சிங்கள வீர விதாகன, ஜாதிக ஹெல உறுமய  போன்ற  பௌத்த தீவிரவாத அமைப்புகளின் உதயத்தின் பின்னணியில் இவர் பங்களிப்பு முக்கியமாக இருந்துள்ளது என்று அறியப்படுகின்றது


கடந்த மஹிந்த அரசாங்கத்தில் பௌத்த மத கலாசார  செயற்பாடுகளுக்கும், பௌத்த தேசியவாத நகர்வுகளுக்கும், வட கிழக்கில் சிங்கள குடியேற்றங்களை சூட்சுமமாக உருவாக்குவதிலும் , கிழக்கில் சுனாமி வீட்டுத் திட்டத்தில் முஸ்லிம் பயனாளிகளுக்கு அந்த வீடுகளை வழங்க விடாது நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்ததிலும்  மிக முக்கிய  பங்காளியாக இருந்த இவர், இதுவரை காலமும் தீவிரமாக எதிர்த்து வந்த ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளராக மாறி தொடர்ந்தும் தம் இலக்கை நோக்கி லாவகமாக சென்று கொண்டிருக்கின்றார்.  


1990 களில் ஸ்ரீ மு ஏழு ஆசனங்களை வென்று சந்திரிகா அரசாங்கத்தின் பங்காளியான மர்ஹும் அஷ்ரபின் அரசியல் வெற்றிக்கு வழிவகுத்தவர் ஜே ஆர் ஜெயவர்தன என்று, ஜே ஆறையும்  தே கட்சியையும் பகிரங்கமாக திட்டி தீர்த்த இவர் இன்று அதே ஐக்கிய தேசிய கட்சியின் பேராதரவாளன். அல்லது அதே ஜே ஆரின் இரத்த உறவு முறை பேரனான ரணில் விக்ரமசின்ஹவின் பிரிக்க முடியாத நெருங்கிய அரசியல் சகா


கடந்த ஆட்சியில் நடைபெற்ற அளுத்கம கலவரங்களின் பின்னணியில் மிக முக்கிய சூத்திரதாரியாக கருதப் படும் இவர் அளுத்கம கலவரங்களின் கதாநாயகர்களை அதாவது ஞான சார தேரர் உட்பட்டவர்களை சட்டத்தின் பிடியிலிருந்தும்  காப்பாற்றியவர் என்று பல சிங்கள ஊடகங்களே சுட்டிக் காட்டியது அவதானிக்கத் தக்க விடயமாகும்


இந்த நல்லாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான செயற்பாடுகள் மிக பகிரங்கமாக நடந்தேறிய போதும் ,மௌனம் காத்த அரசும் அரச காவல் துறையும் சில நெருக்கடி சந்தர்ப்பங்களில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப் படுவதாக நாடகங்கள் அரங்கேற்றப் படும் போது அந்த நாடகங்களின் இயக்குனராக இந்த சம்பிக்க ரணவகவே செயல்பட்டார் என்பதுவும் அரசியல் அவதானிகள் சுட்டிக் காட்டும் விடயமாகும்


குறிப்பாக, ஞானசார தேரரை குருநாகல் நகரத்தில் இரவு நேரத்தில் பாரியதொரு போலிஸ் படையணி மூலம் கைது செய்ய முற்பட்ட வேளை ஏற்கனவே தயார் நிலையிலிருந்த சிங்கள இளைஞர்களை வைத்து ஆர்பாட்டம் நடத்தி அந்த கைதை கைவிட்டதும்நான்கு போலிஸ் குழுக்களை நியமித்து தேடப் பட்டு வந்த ஞானசார தேரர் கைது செய்யப் பட்டு சில மணி நேரங்களில் மூன்று வழக்குகளின் பிடியாணைகள்  ரத்துச் செய்யப் பட்டு நீதிமன்றத்திலிருந்து சிங்கள பௌத்த  ஹீரோவாக வெளியேற வழிசமைத்த பிரபலமான நாடகங்களின் இயக்குனராக இவரே செயல்பட்டுள்ளார் என்று பல தே பா மன்ற உறுப்பினர்களே குற்றம் சாட்டினார்கள்


இந்த சம்பிக்க ரணவக்க இன்றைய நல்லாட்சியில் அதுவும் தே யின் பிரதான செயற்பாட்டாளராக இருந்து கொண்டு பௌத்த தீவிர வாதத்தை தொடர்ந்து முன்னெடுத்து சென்று பௌத்த வாக்குகளின் பெரும்பான்மையுடன் 2020 இல் இந்த நாட்டின் ஜனாதிபதியாகும் தனது நிகழ்ச்சி நிரலை நடைமுறை படுத்துவதற்காக தே யின் மத்திய கொழும்பு அமைப்பாளர் பதவி , அத்துடன் தே ஜனாதிபதி வேட்பாளராக நிமிக்கப் பட்டாலும் வியப்பதற்கில்லை


இவரின் உண்மை முகத்தை அறிந்து கொள்ள 2003 ம் ஆண்டு இவரால் எழுதப்பட்டு தரங்கா பப்ளிஷர்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட  “அல் ஜிஹாத் அல் கைதாமுஸ்லிம் அடிப்படை வாதத்தின் கடந்த காலம் , தற்காலம் , எதிர்காலம் என்ற நூலின் முக்கிய கருத்துக்களை தொடர்ந்து எழுதவுள்ளேன் இன்ஷா அல்லாஹ் எதிர்பாருங்கள்.

“அல் ஜிஹாத் அல் கைதா” நூலாசிரியர் பாடலி சம்பிக்க ரனவக்க பற்றிய ஒர் சிறப்பு பார்வை  “அல் ஜிஹாத் அல் கைதா” நூலாசிரியர் பாடலி சம்பிக்க ரனவக்க பற்றிய ஒர் சிறப்பு பார்வை Reviewed by Madawala News on 11/08/2017 05:28:00 PM Rating: 5