Kidny

Kidny

சகல உள்ளூராட்சி மன்றங்களுக்கும் பெப்ரவரி 2ம் வாரம் தேர்தல் ஒரே தினத்தில்



அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் பெப்ரவரி மாதம் இரண்டாம் வாரம் நடத்தப்படும் என தேர்தல் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.


எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானிக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு திரும்ப பெறப்பட்டுள்ள நிலையில் இன்று தேர்தல்கள் திணைக்களத்தில் கட்சி செயலாளர்களுடனான  விஷேட கூட்டம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.


இந்த விஷேட கூட்டத்தில் தேர்தலை ஒரே தினத்தில் நடத்துவது பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது.


நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து எமக்கு கிடைத்த தகவல்களின் படி பெப்ரவரி 2 ம் வாரம் தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

சகல உள்ளூராட்சி மன்றங்களுக்கும் பெப்ரவரி 2ம் வாரம் தேர்தல் ஒரே தினத்தில்  சகல உள்ளூராட்சி மன்றங்களுக்கும் பெப்ரவரி 2ம் வாரம் தேர்தல் ஒரே தினத்தில் Reviewed by Madawala News on 11/30/2017 07:25:00 PM Rating: 5