Kidny

Kidny

கிந்தோட்டை விவகாரம் தொடர்பில் விஷேட கூட்டம் ..


கிந்தொட்டயில் சிங்களமுஸ்லிம் சமூகங்களிடையே இடம்பெற்ற முறுகல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள  நிலையில்  இது தொடர்பிலான விசேட கூட்டம் காலியில் இடம்பெற்றுள்ளது.


காலி அரசாங்க அதிபர் காரியாளயத்தில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர் வஜிர அபேகுனவர்தன , மனுஷ நானயக்கார மற்றும் பா உறுப்பினர் எஸ் எம் மரிக்கார் மேல் மாகாண சபை உறுப்பினர் இப்திகார் ஜமீல் உற்பட இரு சமூகங்களை சேர்ந்த பிரமுகர்களும் கலந்துகொண்டுள்ளனர்.


குறித்த கூட்டம் தொடர்பில் மடவளை நியுஸுக்கு கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ் எம் மரிக்கார்,


இரு சமூகங்களுக்கிடையில் சகஜமான உறவை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் என குறுத்த கூட்டதில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர்,


பிரதேசத்தில் பூரண அமைதி ஏற்படும் வரை அங்கு உச்சகட்ட பாதுகாப்பு வழங்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.


மேலும் சேதமாகியுள்ள  செத்துக்களுக்கு நஷ்டஈடு வழங்கவும் அதற்கான மதிப்பீடுகளை கிராம சேவகர்கள் ஊடாகவும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை முன்னெடுக்க தீர்மாணிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர் அதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டார்.


தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறிய அவர் மோதல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டதாகவும் கூறினார்.


குறித்த கூட்டத்தில் ஒரு சமூகங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள பிணக்குகளை நீக்க சர்வ மதங்களையும் சேர்ந்த மதகுருமார்கள் அடங்கிய குழு ஒன்றையும் நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


கிந்தோட்டை விவகாரம் தொடர்பில் விஷேட கூட்டம் ..  கிந்தோட்டை விவகாரம் தொடர்பில் விஷேட கூட்டம் .. Reviewed by Madawala News on 11/18/2017 12:32:00 PM Rating: 5