Kidny

Kidny

கிராமத்தை துவம்சம் செய்த யானைகள். மக்கள் கவலை #மூதூர்



எப்.முபாரக்-

 திருகோணமலை மூதூர் முன்னம்போடி வெட்டை பகுதியில் யானைகளின் அட்டகாசம்
 நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக விவசாயிகளும்,பிரதேச மக்களும் கவலை தெரிவிக்கின்றனர்.  


நேற்றிரவு (4) யானைகளின் அட்டகாசத்தினால் இரண்டு வீடுகளுக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளதாகவும் வீட்டு உரீமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முன்னம்போடிவெட்டை,கிளிவெட்டி மற்றும் 58 கிராமம் போன்ற பகுதிகளில் யானைகளின் அட்டகாசத்தினால் வாழைத்தோட்டங்கள்,தென்னம் தோட்டங்கள்,பயிர்ச் செய்கைகளையும் தினமும் துவம்சம் செய்து வருவதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த வாரமும் மூன்று வீடுகளையும் வாழைத்தோட்டம் ஒன்றினையும் யானைக் கூட்டங்கள் அழித்துள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயத்தில் வனஜீவராசி பாதுகாப்பு திணைக்களமும்,பொலிஸாரும் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்
கிராமத்தை துவம்சம் செய்த யானைகள். மக்கள் கவலை #மூதூர் கிராமத்தை துவம்சம் செய்த யானைகள். மக்கள் கவலை #மூதூர் Reviewed by Madawala News on 11/05/2017 09:51:00 AM Rating: 5