Ad Space Available here

மின்­சார கார் உற்பட விலைகுறைப்பு...??? இதைப்படிங்க முதல்ல.


சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள வரவு – செல­வுத்­திட்­டத்தில் மின்­சார காருக்குபத்து இலட்சம் ரூபா விலை குறைக்­கப்­பட்­டாலும்
அதன்  பலனை மக்கள் பெற்­றுக்­கொள்ள முடி­யாது. மேலும் எகுவா,  ஹொண்டா க்ரேஸ், டொயடா போன்ற வாக­னங்­களே நாட்டில் அதி­க­ளவில் பாவிக்­கப்­ப­டு­கி­ன்றன.

 எனினும் அவ்­வா­றான வாக­னங்­க­ளுக்கு ஏழரை இலட்சம் ரூபா வரையில் விலை அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது என்று இலங்கை வாகன இறக்­கு­ம­தி­யாளர் சங்கம் தெரி­வித்­துள்­ளது.

அத்­துடன் வாகன இறக்­கு­ம­தியின் போது மறை­மு­க­மாக திருட்­டுத்­த­ன­மான வரி அற­வி­டு­வ­தற்­கான விதி­மு­றைகள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ள­தற்­கான சந்­தேகம் இருப்­ப­தாக சஙகம் குறிப்­பிட்­டுள்­ளது.

இலங்கை வாகன இறக்­கு­ம­தி­யாளர் சங்கம் ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று கொழும்பில் நடை­பெற்­றது. அதன்­போது அச்­சங்­கத்தின் செய­லாளர் கீர்த்தி குண­வர்­தன கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இதனைத் தெரி­வித்­தனர்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

அர­சாங்கம் இம்­முறை பாரா­ளு­மன்றில் சமர்ப்­பித்­துள்ள வர­வு­செ­ல­வுத்த்­திட்­டத்தில் நடை­மு­றைக்குப் பொருத்­த­மான விடங்­களை இணைத்­துள்­ள­தாகக் குறிப்­பி­டலாம். எனினும் வாக­னங்­க­ளுக்கு விலை குறைக்­கப்­பட்­டாலும் அதன் பலனை மக்கள் அடைந்­து­கொள்­ளப்­போ­வ­தில்லை.

மின்­சார கார்­க­ளுக்கு வரி குறைக்­கப்­பட்­டுள்­ள­தனால் குறைந்த விலையில் மின்சார் கார் கொள்­வ­னவு செய்­ய­மு­டியும் என மக்கள் கரு­து­கின்­றனர். இருந்­த­போ­திலும் அந்த வரப்­பி­ர­சா­தத்தை மக்கள் அனு­ப­விக்­க­மு­டி­யாது.

ஏனெனில் இறக்­கு­ம­தி­செய்­யப்­படும் புதிய மின்­சாரக் கார்­ளுக்கே அந்த சலுகை கிடைக்கும். எனினும் ஜப்பான் புதிய மின்­சாரக் கார்­களை இலங்­கை­கக்கு வழங்­கு­வ­தில்லை. ஏனெனில் அக்­கார்­களைப் பயன்­ப­டுத்­து­வ­தற்­கான அடிப்­படை வசதி நாட்டில் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

 நாட்டில் மக்கள் எகுவா, ஹொண்டா க்ரேஸ், டொயோடா போன்ற வாக­னங்­க­ளையே பாவிக்­கின்­றனர். எனினும் அவ்­வா­றான வாக­னங்­க­ளுக்கு ஏழரை இலட்சம் ரூபா வரையில் விலை அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் ஆயிரம் சி.சி. வாக­னங்­க­ளுக்கு அறி­வி­டப்­படும் ஆயி­ரத்து ஐநூறு ரூபா வரியில் எந்­த­வொரு மாற்­றமும் ஏற்­ப­ட­வில்லை.

  மக்­களின் பாது­காப்பை கருத்­திற்­கொண்டு வாக­னங்­களின் தரம் உறு­திப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­யினை வர­வு­செ­ல­வுத்­திட்­டத்தில் குறிப்­பிட்­டுள்­ளனர். ஆகவே மக்­களின் பாது­காப்பு உறு­தி­செய்­யப்­ப­டாத வாகன இறக்­கு­ம­தியை எதிர்­வரும் ஜன­வரி முதலாம் திகி­தி­யி­லி­ருந்து தடை­செய்­துள்­ளனர். அது வர­வேற்­கத்­தக்க தீர்­மா­ன­மாகும். அத­னை­யொட்டி நிதி­ய­மைச்­ச­ருக்கு நன்றி கூறக்­க­ட­மைப்­பட்­டுள்ளோம்.

  வாகன இறக்­கு­ம­தியின் போது மறை­மு­க­மாக திருட்டுத் தன­மான வரி அற­வி­டு­வ­தற்­கான விதி­மு­றை­களும் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ள­தற்­கான சந்­தேகம் உள்­ளது. ஏனெனில் வாகனம் ஒன்றை கொள்­வ­னவு செய்த பின்னர் அவ்­வா­க­னத்தை பதி­வு­செய்­யும்­போது அங்கும் ஒரு தொகை­யினை அறி­வி­டு­வ­தற்­கான வழி­முறை குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அதா­வது ஹைஎஸ் வேன் ஒன்றை பதி­வு­செய்யும் போது இரண்­டரை இலட்சம் ரூபா வரை­யிலும் அத­னை­விட உயர்ந்த விலை­யி­லுள்ள வாக­னங்­களை பதி­வு­செய்­யும்­போது அதற்கு மேலதிகமான தொகையையும் செலுத்த வேண்டியுள்ளது. அத்தொகை இருபது இலட்சம் வரையிலும் செலுத்த வேண்டிவரும்.

எனினும் அது தொடர்பில் தற்போதைக்கு உறுதியாகக் கூறமுடியாதுள்ளது. இருந்தபோதிலும் கடந்த காலங்களில் சொகுசு வானங்களுக்கே அவ்வாறான வரி அறிவீட்டு விதிமுறை இருந்ததது. ஆயினும் இம்முறை ஹை.எஸ். வேனையும் அதில் உள்ளடக்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மின்­சார கார் உற்பட விலைகுறைப்பு...??? இதைப்படிங்க முதல்ல. மின்­சார கார் உற்பட விலைகுறைப்பு...???  இதைப்படிங்க முதல்ல. Reviewed by Madawala News on 11/11/2017 03:17:00 PM Rating: 5