Kidny

Kidny

இந்த 'வைட் கொலர்' கிரிமினல்களை கண்டால் அறிவிக்கவும். அக்குறணை CCTV யில் சிக்கினர்.


தன்னியக்க அட்டைகளின் தரவுகளை மிகவும் இரகசியமாக நூதன  முறையில் களவெடுத்து, அவற்றின் ஊடாக சட்டவிரோதமாக பணத்தை மீளப்பெற்ற இருவர் தொடர்பில், குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

மக்கள் வங்கியின் தலைமையகத்தினால் செய்யப்பட்ட முறைபாடுகளுக்கு அமையவே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள ஊடாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றம் தொடர்பில், இரத்தினபுரி, குருவிட்ட மற்றும் அக்குறணை ஆகிய இடங்களில் உள்ள மக்கள் வங்கிக் கிளைகளில் ​பொருத்தப்பட்டுள்ள சீ.சீ.ரி.வி கெமெரா தொகுதியில் காட்சிகள் பதிவாகியுள்ளன.

அவ்விருவரும்,  மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட தொகையை தன்னியக்க அட்டையின் ஊடாக மீளப்பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது.

இவ்விருவர் தொடர்பில் தகவல் தெரிந்தால், 011-2326670,0112320141 மற்றும் 011-2320145 ஆகிய தொலை​பேசி இலக்கங்கள் அல்லது 011-2380380 என்ற பெக்ஸ் இலக்கத்துக்கு அறிவிக்குமாறும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 'வைட் கொலர்' கிரிமினல்களை கண்டால் அறிவிக்கவும். அக்குறணை CCTV யில் சிக்கினர். இந்த 'வைட் கொலர்' கிரிமினல்களை கண்டால் அறிவிக்கவும். அக்குறணை CCTV யில் சிக்கினர். Reviewed by Madawala News on 11/25/2017 01:27:00 PM Rating: 5