Kidny

Kidny

நாம் தேர்தலை தள்ளிப்போட முக்கிய காரணம் மகிந்த ராஜபக்ஷ காலத்தில் இடம்பெற்ற மாற்றமே ஆகும்.


நவம்பர் 27ம் திகதி இலங்கை யில் தேர்தலை நடத்துவது தொடர்பாக அறிவிப்பொன்றை வெளியிட தேர்தல்
ஆணையாளர் தயாராக இருந்தார்.
அநேகமாக ஜனவரி 25 -  31 வரையான காலப் பகுதியில் தேர்தலை நடத்துவது தொடர்பாக கூறப்பட்டது. ஆனால் மேன்முறை யீடடு நீதிமன்றால் தடை உத்தர வொன்று தேர்தல் ஆணையாளருக்கு பிறப்பிக்கப்பட்டது.

இது தொடர் பாக பலவிதமான விமர்சனங்களும் விவாதங்களும் வெளியிடப்பட் டன.


அரசை சார்ந்த சிலர் தேர்தலை வேண்டுமென்றே பின்போடுவதாக எதிர்க்கட்சியினர் வழமைபோல் குற் றஞ்சாட்டுகின்றார்கள்.

எமது அரசியலமைப்பின்படி அரசுரிமை மக்களின் அடிப்படை உரிமையாகும். அதனை பாராளுமன்றத்தினாலும் மாற்ற முடியாது. அதனால் தேர்தலை நடத்த வேண்டும்.

 ஆனால் தேர்தலை தள்ளிப்போட சில  காரணங்கள் உருவானது. அதற்கு முக்கிய காரணம் தேர்தல் முறை மஹிந்த ராஜ பகூடி ஆட்சிக் காலத் தில் மாற்றத்துக்கு உள்ளாக்கப்பட்டதாகும்.


அச்சந்தர்ப்பத தில் புதிய முறையில் தேர்தல் நடத்தப் பட வேண்டுமென ஆலோசனை கூறப் பட்டாலும் மஹிந்த ராஜபக்ஷ பழைய விகிதாசார முறைப்படியே தேர்தலை நடத்தினார்.


புதிய தேர்தல் முறைக்கு நாமும் ஒப்புதல் அளித்தோம். அதற்கான பிரதான விடயமாக நாம் கருதியது என்னவென்றால் தங்களுடைய அதிகாரத்துக்குட்பட்ட பிரதேசத்தில் தங்கள் பிரதிநிதிகள் நியமிக்கப்படு வதற்கான சந்தர்ப்பம் அதிகமாகக் காணப்பட்டமையாகும். ஆனால் இறுதியாக அங்கீகரிக்கப்பட்ட விதத்தில் பிரதேச சபைகளின் ஸ்தி ரத்தன்மை தொடர்பாக பிரச்சினை ஏற்ப ட் டுள்ளது .

ஏனென்றால் ஏதோ ஒரு விதத்தில் எல்லா அரசியல் கட்சிகளுக் கும் கிடைக்கும். வாக்குகளின்படியே அவர்களின் பிரதிநி தித்துவம் பெறப்படுவது உறுதி செய் யப் பட் டுள்ளது .

இதன்படி தொகுதி ரீதியாக உறுப்பினர் நியமிக்கப்பட்டாலும் இறுதியில் இது விகிதாசார முறை யாகவே அமைகின்றது.

அதன்படி அனைத்து கட்சிகளுக்கும் தங்களுடைய வாக்கு விகிதாசாரப்படி உறுப்பினர்களைத் தெரிவு செய்ய
முடியும்.

இந்நிலையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை இருமடங்காகியது.
ஆசன ரீதியாக 4500 இருந்த உறுப் பினர்கள் எண்ணிக்கை 9000 ஆக அதிகரித்தது.

அதற்கு தொகுதிவா ரியான முறையிலும் விகிதாசார
முறையிலும் ஏற்படுத்தப்பட்ட மாற்றமும் அதேபோல் பெண்களின் பிர திநிதித்துவம் 25 வீதமாக காணப்பட வேண்டும் என்னும் யோசனையு மாகும்.

இது தொடர்பாக விவாதங் கள் எதுவாயினும் இதன் மூலம் நிலையான பிரதேச சபையை உரு வாக்க முடியுமா?

 என்னும் கேள்வி எம் முன்னே உள்ளது. வெற்றி பெறும் கட்சிக்கு நிலையாவதற்கு இருந்த சந்தர்ப்பம் இதன் மூலம் ஏதோவொரு விதத்தில் அதனா லேயே சவாலுக்குள்ளாக்கியது.

அதனால் தேர்தலை நடத்தி அதன் முடிவை ஆராய்ந்து அனைத்து கட்சி களும் இணைத்து தேர்தல்முறையை மீண்டும் திருத்த வேண்டும்.

அதேபோல் மாகாண சபைத்தேர்தலையும் இவ் அனுபவத்தைப் பெற்று திருத்த வேண்டும். அதேபோல பாராளுமன்ற முறை யையும் நிலையான அரசாங்கம் அமையும் வகையில் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமென அமைச்சர் கூறினார்.

நாம் தேர்தலை தள்ளிப்போட முக்கிய காரணம் மகிந்த ராஜபக்ஷ காலத்தில் இடம்பெற்ற மாற்றமே ஆகும். நாம்  தேர்தலை தள்ளிப்போட முக்கிய காரணம் மகிந்த ராஜபக்ஷ காலத்தில் இடம்பெற்ற மாற்றமே ஆகும். Reviewed by Madawala News on 11/27/2017 10:15:00 AM Rating: 5