Kidny

Kidny

புதிய உள்ளூராட்சி எல்லை நிர்ணயம் அறிமுக நிகழ்வு. ( கண்டியில்)


வெலம்பொட ராஃபி

ஒரு நாடு அபிவிருத்தியடைவது அல்லது  வீழ்ச்சியடைவது என்பன
அந்த நாட்டின் அரசியல் சார்ந்த தீர்மானங்களில் தங்கியுள்ளது.

அரசியலமைப்புக்கு அமையவே அரசியல் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இது போன்ற அரசியல் தீர்மானங்களை மேற்கொள்வதற்கு தகுதியானவர்கள் அந்த நாட்டின் தேர்தல் முறைகளுக்கு ஏற்ப தெரிவு செய்யப்படுவர்.

அரசியமைப்பாகட்டும் அல்லது தேர்தல் முறையாகட்டும் அவை பொதுவாகவே நாட்டின் நலன் கருதியே உருவாக்கப்படுகின்றன.  எனினும் பொருத்தமான அரசியல்வாதிகள் நியமிக்கப்படாத போது நாட்டின் அபிவிருத்திக்காக உருவாககப்படுகின்ற அரசியலமைப்பு பிழையான முறையில் பயன்படுத்தப்பட்டு நாடு வீழ்ச்சியை நோக்கி நகர்த்தப்படும் வாய்ப்புள்ளது.

எனவே பொருத்தமான அரசியல்வாதிகளை ஆட்சி பீடத்திற்கு அனுப்பி வைப்பது வாக்காளர்களான நாட்டுப் பிரைஜைகளின் பொறுப்பாகும். நாட்டின் தேர்தல் முறைமைகள் குறித்து பூரண அறிவை வாக்காளர்கள் பெற்றிருப்பது பொருத்தமான முறையில் தமது வாக்குரிமையைப் பிரயோகிக்க வாய்ப்புகளை ஏற்படுத்தும்.

தற்போது ஒரு அரசியலமைப்பின் மாற்றத்தை இந்த நாடு பெற்றுள்ளது. உள்ளூராட்சிமுறையில் புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்படுள்ளன. இந்த புதிய நடைமுறையானது சிறந்த அரசியல் பிரதிநிதிகளை உருவாக்குவதற்கான வாயப்புக்களை வாக்காளர்களுக்கு வழங்கி மக்களுக்கு நன்மை பயக்கும் அரசியல் முறையை உருவாக்கும் விதத்தில் அடைந்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் குறிபபிடுகின்றனர்.

உள்ளூராட்சி முறைமை, எல்லை நிர்நயங்கள், தேர்தல் முறைகள் என்பன ஒரு புதிய பரிணாமத்தைப் பெற்றுவிட்டது. இந்த மாற்றங்கள் என்ன என்பது குறித்து தேர்தல் ஆணையத்தின் மேலதிக தேர்தல் ஆணையார் மூலம் கணடி வாழ் தமிழ் பேசும் மக்களுக்கு தெளிவினை வழங்க கண்டி The Young Friends நிறுவனம் அகில இலங்கை YMMA நிறுவனத்துடன் இணைந்து முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

மேற்படி நிகழ்வு நவம்பர் 26ம் திகதி காலை 9.30 மணி முதல் கண்டி மஹிய்யாவ கிரேன் ரிஸெப்சன் ஹோல் மண்டபத்தில் நடைபெறும்.

நிகழ்வில் பங்குகொள்ளவிரும்புவோர் மற்றும் மேலதிக விபரங்களை பெற விரும்புவோர் 076 645 6771, 0777 391 691  எனும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்.

புதிய உள்ளூராட்சி எல்லை நிர்ணயம் அறிமுக நிகழ்வு. ( கண்டியில்) புதிய  உள்ளூராட்சி எல்லை நிர்ணயம்  அறிமுக நிகழ்வு. ( கண்டியில்) Reviewed by Madawala News on 11/22/2017 06:57:00 AM Rating: 5