Kidny

Kidny

கஞ்வாசாவை வாங்கிவிட்டு இறைச்சிக் கடை வியாபாரிகளுக்கு மாடுகளை பிடித்துக் கொடுக்கும் இராணுவத்தினர். #இலங்கை.


காங்கேசன்துறை மற்றும் தையிட்டி பகு திகளில் உள்ள இராணுவத்தின் எல்லை பகுதியில் உள்ள இராணுவத்தினர்
கஞ்வாசாவை  வாங்கிவிட்டு,  உயர் பாதுகாப்பு வலயப்பகுதியில் உள்ள கட்டாக்காலி கால்நடைகளை இறைச்சி விற்பனையாளர்களுக்கு பிடித்துக்கொடுக்கும் சம்பவங்கள் இடம்பெறுவதாக பிரதேசமக்கள் தெரிவிக்கின்றனர்.


கால்நடைகளை பிடித்துக் கொடுக்கும் இராணுவத்தினருக்கு இறைச்சி வியா பாரிகள் கஞ்சாவை விநியோெகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் முக்கிய சூத்திரதாரியாக ஏழாலை பகுதியைச் சே ர்ந்த ஒரு இறைச்சி வியாபாரி செயற்படுவ தாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவங்கள் தொடர்பில் இராணுவ உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப் படுகிறது.

இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிள் மற்றும் கனரக வாகனங்களில் வரும் இறைச்சி வியாபாரிகள் இராணுவ எல்லைப் புறத்தில் காவல் கடமையில் இருக்கும் இராணுவ சிப்பாய்களுக்கு கஞ்சா பொதிகளை தாராளமாக வழங் குகின்றனர்.

இதற்கு பதிலாக கட்டாக் காலியாக காடுகளில் படுத்து உறங்கும் மாடுகாைமுட்கம்பிக்கு வெளியில்துரத்தி விடுவதனை  வழமையாக அவர்கள்கொண்டுள்ளனர்.

கடந்தவாரம் இவ்வாறான சம்பவம் ஒன்று இடம்பெற்ற நிலையில் அது காங்கேசன் துறை பொலில் புலனாய்வு அதிகாரிகளி னால் முறியடிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் இரண்டு கால்களும் கட்டப்பட்ட நிலையில் இருந்த கன்றும்மாடு ஒன்றும்பொலி லாரினால் மீட்கப்பட்டிருந்தது.

கடத்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வயாவிளான் பகுதியில் இராணுவத்தின ருக்கு கஞ்சா விற்பனை செய்ய முற்பட்ட இருஇளைஞர்கள் காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு:பொலிலாரினால் கைதுசெய் யப்பட்டு தெல்லிப்பழை பொலிலாரிடம் ஒப்படைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், இராணுவ எல்லைப்புற பகுதிகளில் இரா ணுவ பொலிஸாரின்ரோத்தினைஅதிகரித்து இவ்வாறான குற்றச்செயல்களை கட்டுப்ப டுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.


இதேபோல் உயர் பாதுகாப்பு வலயத்திற் குள் இருக்கும் கட்டாக்காலி மாடுகளை வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மக்களுக்கு வழங்குவதன் மூலம் கால்நடைகளை இறைச்சி வியாபாரிகளிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியுமெனவும் தெரிவிக் கப்படுகிறது.

கஞ்வாசாவை வாங்கிவிட்டு இறைச்சிக் கடை வியாபாரிகளுக்கு மாடுகளை பிடித்துக் கொடுக்கும் இராணுவத்தினர். #இலங்கை. கஞ்வாசாவை  வாங்கிவிட்டு இறைச்சிக் கடை வியாபாரிகளுக்கு  மாடுகளை பிடித்துக் கொடுக்கும் இராணுவத்தினர். #இலங்கை. Reviewed by Madawala News on 11/13/2017 02:45:00 PM Rating: 5