Kidny

Kidny

பெற்றோலில் மண்ணென்ணை மிக்சிங்.. மற்றுமொரு எரிபொருள் நிரப்பு நிலையம் மீது குற்றச்சாட்டு.


நாஉன பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில், பெற்றோலில் மண்ணென்ணை கலந்து வாகனங்களுக்கு நிரப்பப்படுவதாக, குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

வாகன உரிமையாளர்கள் தெரிவித்துள்ள இந்தக் குற்றச்சாட்டின் உண்மைத் தன்மை குறித்து ஆராய்வுகள் மேற்கொள்ளபட்டன.

இதன்போது, போத்தலில் பெற்றோலை பெற்றுக் கொண்ட இளைஞர் ஒருவர் அதில் நிறமாற்றம் காணப்படுவதாகவும், எனவே மண்ணென்ணை கலந்திருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.

இது குறித்து, அச் சந்தர்ப்பத்தில், சம்பந்தப்பட்ட எரிபொருள் நிலையத்தின் முகாமையாளர் எனக் கூறிக் கொண்டு அங்கு வந்தவர்,  அதற்கு பதிலளித்தார்.

 அவர், தனக்கும் அதுபோன்ற முறைப்பாடு கிடைக்கப் பெற்று தான் ஆராய்ந்து பார்த்த போது, அவ்வாறு எதுவும் இருப்பதாக தன்னால் கூற முடியவில்லை என, சுட்டிக்காட்டினார்.

மேலும், அவ்வாறு பெற்றோலில் மண்ணென்ணை கலந்து வாகனங்களுக்கு நிரப்பப்படுவதாக கூறுபவர்களை, அதனை நிரூபிக்குமாறு அவர் கோரினார்.

இவை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் வழங்கப்பட்ட ஒன்று எனவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதுஎவ்வாறு இருப்பினும், எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்திருந்த பெரும்பாலானவர்கள் பெற்றோலில் நிற மாற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும், மண்ணென்ணை வாசனை வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தநிலையில் அப் பகுதிக்கு வந்த பொலிஸ் அதிகாரிகள், தற்காலிகமாக பெற்றோல் விநியோகத்தை நிறுத்தி வைத்து விட்டு, இது குறித்து ஆராயுமாறு, சம்பந்தப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளரிடம் கூறியுள்ளனர்.
பெற்றோலில் மண்ணென்ணை மிக்சிங்.. மற்றுமொரு எரிபொருள் நிரப்பு நிலையம் மீது குற்றச்சாட்டு. பெற்றோலில் மண்ணென்ணை மிக்சிங்.. மற்றுமொரு எரிபொருள் நிரப்பு நிலையம் மீது குற்றச்சாட்டு. Reviewed by Madawala News on 11/23/2017 11:09:00 AM Rating: 5