Kidny

Kidny

ரொபர்ட் முகாபேயின் ஆட்சிக்கே சாவுமணி அடித்த மனைவி கிரேஸ் நொப்பின் அதிகார ஆசை.. ஒரு சுவாரஸ்ய பார்வை.


ஜனாதிபதி அலுவலத்தில் தட்டச்சு வேலை கிடைத்தபோது அந்த ஒரு குழந்தையின் தாய் ஏதோ
ஆன்றாட பிழைப்பை ஒட்ட வழி கிடைத் துவிட்டது என்றுதான் நினைத்திருப்பாள்.

ஆனால் ஜனாதிபதியே வழிய வந்து ஊர், பேர் கேட்க ஆரம்பித்தபோது அது இப்படி தலையெழுத்தை மாற்றிவிடும் என்று யார் நினைத்தார்கள்.

ரொபர்ட் முகாபே தன்னை விடவும் 40 வயது இளமையான கிரேஸ் நொப் பிசொட்வா மீது 1990களின் ஆரம்பத் தில் காதல் கொண்டபோது அதனை கள்ளக் காதல் என்றே ஊர் சொன்னது.

திருமணம் முடித்த முதியவரான முகாபேவின் மனைவி சலி முகாபே புற்றுநோயால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். விமானப்படையின் விமான ஒட்டியான ஸ்டான்லி கொரோசாவை திருமணம் முடித்திருந்த கிரேஸுக்கு ஒரு குழந்தை கூட இருந்தது.


இத்தனை நெருக்கடிகளோடு அந்த கள்ளக்காதல் தொடர்ந்தது. இரண்டு குழந்தைகள் வேறு பிறந்தன. சலி 1992இல் மரணித்தார். 1996 ஆம் அண்டு கிரேஸ் தனது முதல் கணவரை விவாகரத்துக் செய்துவிட்டு அடுத்த முகூர்த்தத்திலேயே முகாபேவை திருமணம் செய்தார்.

40 ஆயிரம்பேர் பங்கேற்ற அந்த ஆடம்பர திருமணத்தில் நெல்சன் மண்டேலா கூட வந்திருந்தார்.

ஓர் ஆண்டு கழித்து 73 வயது முகாபேவுக்கும் 32 வயது கிரேஸுக்கும் மூன்றா வது குழந்தையும் பிறந்தது. அதுவரை காலமும் நாட்டின் முதல் பெண்மணியாக இருந்து மரணித்த சலியை விஞ்சி தனது செல்வாக்கை அதிகரிப்பது தான் கிரேஸின் முதலாவது போராட்டமாக இருந்தது.

அடிக்கடி கணவரோடு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற் பது கிரேஸின் வாடிக்கையாக மாறியது. ஆனால் அரசியல் பேசமாட்டார். ஆனால் தொண்டு பணிகள் செய்வார். அதுவும் ஆடம்பரமாக இருக்கும்.

அடிக் கடி சொப்பிங் சென்று ஆடம்பர பொருட்களை வாங்குவார். இதனால் நாட்டில் அவருக்கு 'குஸ்ஸி கிரேஸ்' என்று பெயர் கூட இருக்கிறது. குதிகால் நீண்ட பாதணிகளில் நடந்து வரும் கிரேஸிடம் மேட்டுக்குடி பெண்களின் பாவணை கள் அப்பட்டமாக தெரிந்தது.

இதனால் அவரை பொதுவாக பொதுமக்களுக்கு பிடிப்பதில்லை. ஆனால் நாளாக நாளாக கிரேஸின் போக்கே மாறியது. சராசரி ஆடம்பர முதல் பெண்மணி என்பதில் இருந்து நாட்டின் பலம்மிக்க ஒருவராக மாறிக் கொண்டிருந்தார்.

எனவே சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை. 2009 இல் -
ஹொங்கொங் ஹோட்டல் - ஒன்றுக்கு வெளியில் நின்றிருந்த கிரேஸை பிரிட்டன் புகைப் படப் பிடிப்பாளர் ஒருவர் படம்பிடிக்க முயன்றார். கிரேஸின் மெய்க்காவலர்கள் அவரை துரத்திப் பிடித்து கிரேஸிடம் கொண்டுபோனபோது அந்த முதல் பெண் இரு கண்ணத்திலும் அறைக்கு மேல் அறை விட்டி ருக்கிறார்.

 அதற்கு பின்னர் சிம்பாப்வே, சிங்கப்பூர், மலேசியா என்று அவரின் சர்ச்சைகள் தொடர்ந்தன. அண்மை யில் கூட தென்னாபிரிக்காவில் இளம் அழகி ஒன்றை தாக்கி சிக்கலில் மாட்டிக் கொண்டதால் நாடு திரும்பவே கஷ்டப்பட்டார்.

இதுபோக திவாலான சுரங்க வர்த்தகத்தில் ஈடுபட்டது துரத்தப் பட்ட முன்னாள் வெள்ளை முதலாளிகளின் பண்ணைகளில் புதிய முதலாளியானது என்று கிரேஸின் ஆசைகள் அதிகம்.

அடுத்து கணவின் அரசியல் பக்கம் தலைகாட்ட ஆரம்பித்தார். ஆளும் கட்சியின் பெண்கள் பிரிவு தலைவியானார். பின்னர் கட்சியில் முடிவுகள் எடுக்கும் உயர் குழுவில் அங்கத் தவரானார். கணவரைப் போலவே பெயருக்கு கலாநிதிப் பட்டமும் பெற்றார். பல்கலைக் கழகத்தில் மூன்று மாதங் களுக்கு முன்பதிவு செய்து அதற்குள் கலாநிதிப் பட்டம் பெறுவதென்பது எல் லோராலும் முடியாது.

அரசின் பிரசார இயந்திரம் கிரேஸ் முகாபேவின் புகழ்பாட ஆரம்பித்தது. பேரணிகள் நடத்துவது, கணவருக்கு நிகராக கூட்டங்களில் இருப்பது என்று
கிரேஸ் வளர்ந்துவிட்டார்.

"நான் ஜனாதிபதியாக வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஏன் முடியாது? நான் ஒரு சிம்பாப் வேயர் இல்லையா?" என்று கிரேஸ் ஒரு கூட்டத்தில் கூறி யபோது, இந்த அரண்மனை கிளி எந்தப்பக்கம் பறக்கிறது என்று நாட்டு மக்களுக்கு புரிந்துவிட்டது.


முதல் பெண்மணி ஆளும் சானு பி.எப் கட்சியின் இளைஞர் குழுவில் செல்வாக்கை வளர்த்துக் கொண்டார். அங்கே தனக்கான முகாம் ஒன்றை அமைத்துக் கொண்ட அவர், கணவர் இருக்கும் தைரியத்தில் ஆளும்கட்சி யின் பெரும் தலைகளோடு நேருக்கு நேர் மல்லுக்கு நின்றார்.


முகாபேக்கொ தள்ளாடும் வயது. 90களை தாண்டியும் நாட்டின் தலை வராக இருக்கும் உலகின் ஒரே ஒருவர் அவராகத் தான் இருப்பார். எனவே அடுத்த தலைமைக்கான போட்டி ஆளும் கட்சிக்குள் தீவிரமடைந்தபோது
கிரேஸ் முகாபேவும், துணை ஜனாதிபதி எமர்சன் மான்கக்வாவும் கயிறுழுத்துக் கொண்டார்கள்.


கடந்த நவம்பர் 6 ஆம் திகதி மான்கக் வாவை முகாபே பதவி நீக்கியது இந்த அதிகாரப் போட்டியின் உச்சம்.

கிரேஸ் முகாபே கடைசி காயையும் தனக்கு சாதகமாக நகர்த்திவிட்டார். ஆனால் ஒன்றும் அறியாத பெண்ணாக இருந்து அதிகார நாற் காலிக்கு ஆசைப்பட்டது வரை கிரேஸ் முகாபே முழுக்க முழுக்க தனது கண வரையே நம்பி இருந்தார்.

அதற்கு அப்பால் ஓர் உலகம் இருப்பதை அவர் புரிந்துகொள்ளவே இல்லை. மான்கக்வா என்பவர் சாதாரணமானவரல்ல, 1970களில் இடம்பெற்ற சிறுபான்மை வெள்ளையின ஆட் சிக்கு எதிரான போராட்டத்தில் முகாபே போன்றே 75 வயது மான்கக்வாவும் ஒரு விடுதலை வீரர் நாட்டின் இராணுவ தலைமைகளின் ஆதரவை வளர்த் துக்கொண்டிருந்தார்.

 எனவே, தன்னை பதவி நீக்கிய விரைவில் இராணுவத்தை கொண்டு முகாபேவின் 37 ஆண்டு பதவி நாற்காலியையே பறித்துவிட்டார்.

1980இல் சிம்பாப்வேயில் பிரிட்டன் காலனித்துவ ஆட்சி முடிந்தது தொடக் கம் நாட்டின் ஏக தலைவராக இருக்கும் ரொபர்ட் முகாபேவை ஒரு கோமாளி சர்வாதிகாரியாக மேற்குலகம் சித்த ரித்தபோதும் சிம்பாப்வேயை பொறுத் தவரை அவர் ஒரு தேசத்தின் பிதா, ஆபிரிக்காவின் விடுதலை வீரர்களில் அவரும் ஒருவர்.


ஆட்சியில் தொங்கிக்கொண்டிருந்தது, ஆட்சி செய்யத் தெரியாமல் நாட்டையே திவாலாக்கியது என்று எத்தனை விமர்சனங்கள் இருந் தபோதும் இந்த தள்ளாடும் வயதிலும் யாராலும் அசைக்க முடியாதவராகவே இருந்தார்.

அமெரிக்கா, பிரிட்டன் என்று மேற் குலம் கூட இந்த முதியவரை எப்படி துரத்துவதற்கு என்று வழிதெரியாமல் தடுமாறிக்கொண்டிருந்தபோது அதிகார ஆசை பிடித்த ஒரு பெண் அவரை ஆட்சி கவிழ்க்க போதுமாக இருந்திருக்கிறார்.

பதவியை துறந்த முகாபே இப்போது தனது ஆடம்பர மாளிகையில் வீட்டுக் காவலில் இருக்கிறார். தன்னை இந்த நிலைமைக்கு கொண்டுவந்த கிரேஸ் முகாபே எங்கே இருக்கிறார் என்று தெரி யவில்லை.

ஒருவேளை நாட்டை விட்டு தப்பித்து சென்றிருக்கலாம். இல்லை தனது எதிரிகளிடம் மாட்டிக் கொண்டிருக்கலாம் . பிற்போக்கான இதிகாச கதைகளில் தான் பெண்ணால் கெட்ட மன்னாதி மன் னர்களை பார்த்திருக்கிறோம். கடவுளாள் மாத்திரமே என்னை பதவியில் இருந்து தூக்க முடியும் என்று சொன்ன முகாபே பாவம் அருகில் இருக்கும் மனைவியை பார்க்க மறந்துவிட்டார்.

(எஸ். பிர்தெளஸ்)

ரொபர்ட் முகாபேயின் ஆட்சிக்கே சாவுமணி அடித்த மனைவி கிரேஸ் நொப்பின் அதிகார ஆசை.. ஒரு சுவாரஸ்ய பார்வை. ரொபர்ட் முகாபேயின் ஆட்சிக்கே சாவுமணி அடித்த மனைவி கிரேஸ் நொப்பின் அதிகார ஆசை.. ஒரு சுவாரஸ்ய பார்வை. Reviewed by Madawala News on 11/24/2017 10:44:00 AM Rating: 5