Kidny

Kidny

டிஜிட்டல் இலங்கை (கல்வி).. பிரதமர் ரணிலிடம் மோடி அளித்த உறுதி.


இலங்கை அதன் 70ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடத் தயாராகி வரும் நிலையில் இலங் கையின் கல்வித்துறை முன்னேற்றத்துக்கான நவீன உத்திகளை கையாளும் டிஜிட்டல் தொழில் நுட்பத்தை பயன்படுத்த இந்தியா ஒத்துழைப்புக்களை வழங்கத் தயாராக இருப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவி டம் உறுதியளித்துள்ளார்.


உலகம் டிஜிட்டல் யுகத்தை நோக்கி முன்னேறிக் கொண்டி ருக்கும் நிலையில் அதன் முழுப் பயனையும் வளர்முக நாடுகளும் பெற்றுக்கொள்வதற்கான வழிமு றைகள் ஏற்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் இந்தியப் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.


இந்தியாவுக்கான உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருக்கும் பிரதமர் ரணில் விக் கிரமசிங்க, நேற்று நண்பகல் புதுடில்லியிலுள்ள ஹைதராபாத் மாளிகையில் இடம்பெற்ற இரு தரப்புச் சந்திப்பின் போதே பிரத மர் மோடி இந்த உத்தரவாதத்தை வழங்கியுள்ளார்.


இளைஞர் அபிலாஷைகளை நிறைவேற்ற விரைவாக அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டுமென பிரதமர் மோடி அங்கு கூறினார்.
அவற்றை நிறைவேற் றும் போது ஏற்படும் சவால்க ளுக்குஎவ்வாறுமுகம் கொடுப்பது என்பது பற்றியும் கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டது.


இந்த அபிவிருத்தித் திட்டங்களினூடாக இலங்கையின்
பொருளாதாரம் மேம்படுவதோடு தொழில் வாய்ப்புகளும் உருவாகும் என இந்தியப் பிரதமர் சுட்டிக்காட்டி யுள்ளார்.இலங்கை இந்திய கூட்டுத் திட்டங்களுக்கான அனைத்து முயற் சிகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் தற்போதுள்ள சில பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படுமெனவும் அவர்நம்பிக்கைத் தெரிவித்தார்.


இலங்கை இந்திய உறவுகளை மேலும் பலப்படுத்த பிரதமர் ரணில் விக்கிரசிங்க மேற்கொள்ளும் முயற்சியை பிரதமர் மோடி பாராட் டியதோடு உள்நாட்டு அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியிலும் இரு நாடுகளின் உறவைப் பலப்படுத்த பெரும் சேவையாற்றுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

மே மாதம் இலங்கைக்கு தாம் விஜயம் செய்திருந்த வேளை இலங்கை மக்கள் தம் மீது காட்டிய அன்புக்கு விசேட நன்றியைத் தெரிவித்தார். ரணில் விக்கிரமசிங்க தலைமையிலானதுதுக்குழுவினருக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பகல் போசன விருந்தளித்து கெளரவித்தார்.

இதேவேளை, புதுடில்லியில் ஆரம்பமான சைபர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்றைய காலகட்டத்தில் தகவல் மற்றும் கல்வி அறிவை பெற்றுக்கொள்வதற்கான முக்கிய அரங்கமாக சைபர் தொழி நுட்பம் வாய்ப்பாக அமைந்துள்ளது.


வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற் கும் மனிதவள அபிவிருத்தி, சமூக முன்னேற்றச் செயற்பாடுகள் என்பன இதில் பிரதான அங்கமாக அமைகின் றது. இதன் காரணமாக மக்கள் சமூகம் புதிய சவால்களுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படலாம். மக்களது சுதந் திரம், உரிமை, தனிப்பட்ட சுதந்திரம் என்பன இந்த சவால்களாக அமைய லாம்.


எனவே முதலாவதாக எம்மி டையே சைபர் ஒழுக்க விதிக்கோவை ஒன்று தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தேவை எமக்கு இருக்கின்றது. சுதந்திரமாக தகவல்கள் குவியும் ஒரு சூழ்நிலையில் தனிப்பட்ட சுதந் திரங்களையும் உள்வாங்கி சமாந்திரமாக கையாளும் ஒரு போக்கு எமக்கு முக்கியமானதொன்றாகும்.

இந்த சைபர் தொழிநுட்பம் இன்று உலகின் 135 நாடுகளில் கவனம் செலுத்தப் பட்டுவரும் ஒரு உத்தியாகும். இதி லிருந்து நாம் விலகி நிற்க முடியாது எனப் பிரதமர் தெரிவித்தார்.


இவ்வைபவத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க, பிரதம ரின் பாரியார் மைத்திரிவிக்கிரமசிங்க, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநா யக்க, இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சித்ராங்கனி வாகீஸ் வர, பிரதி உயர்ஸ்தானிகர் எம்.ஆர். கே. லெனகல ஆகியோரும் கலந்து கொண்டனர்.

டிஜிட்டல் இலங்கை (கல்வி).. பிரதமர் ரணிலிடம் மோடி அளித்த உறுதி. டிஜிட்டல்  இலங்கை (கல்வி).. பிரதமர் ரணிலிடம் மோடி அளித்த உறுதி. Reviewed by Madawala News on 11/24/2017 09:26:00 AM Rating: 5