Yahya

இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் அரசியலை அரசியலை விட்டு ஒருபோதும் ஒதுங்கியிருக்கக் கூடாது.


முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் அரசியலை விட்டும் ஒதுங்கியிருக்கக் கூடாது என பொது பல சேனா அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி டிலந்த விதானகே தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்ற 'வேற்றுமையில் ஒற்றுமையே தேசத்தின் பலம் எனும் தொனிப் பொருளிலான கட் டுரை மற்றும் ஒவியப் போட் டியில் வெற்றி பெற்றோருக் கான பரிசளிப்பு நிகழ்வில் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் ஆற்றிய இன ஐக்கியம் தொடர்பான உரையை வரவேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

டிலந்த விதானகே இது தொடர்பில் மேலும் குறிப்பி டுகையில்,

நீங்கள் சொல்வது நல்ல விடயம். நீங்கள் அரசியலில் வகித்து வந்த உன்னத நிலையிலிருந்து நீங்காது இருந்திருக்கலாம் என்பதே எனது அபிப்பிராயமாகும்.

2003 இல் நீங்கள் அரசியலிலிருந்து வெளியேறப் போவதாக உங்களது விஜேராம இல்லத்தில் வைத்து என்னிடம் கூறியபோது அவ்வாறு செய்ய வேண்டாம் என்று நான் உங்களைக் கேட்டுக் கொண்டமை என் மனதில் இன்றும் நிழலாடுகிறது.

ஆனாலும் நீங்கள் அந்த முடிவுக்கு வந்ததிலும் நியாய மான காரணிகள் இருக்கவே செய்கின்றன என்றும் டிலந்த விதானகே தனது முகநூலில் மேலும் தெரிவித்துள்ளார்.
இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் அரசியலை அரசியலை விட்டு ஒருபோதும் ஒதுங்கியிருக்கக் கூடாது. இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் அரசியலை அரசியலை விட்டு ஒருபோதும்  ஒதுங்கியிருக்கக் கூடாது. Reviewed by Madawala News on 11/07/2017 11:02:00 AM Rating: 5