Kidny

Kidny

மாமியாரும் மருமகளும் படுகொலை.. சடலங்களுடன் இரவு - பகலை கழித்த சிறு பிள்ளைகள்.


மாத்தறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவிமன வடக்கு, துன்போதிய பிரதேசத்திலுள்ள
வீடொன்றில், படுகொலை செய்யப்பட்ட நிலையில் இரு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இன்று (26) பிற்பகல் 1  மணியளவில், இந்தப் படுகொலைச் சம்பவம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதென   பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீட்டில் குடியிருக்கும் பாலித்த அபேவர்தன என்பவரின் தாயும் மனைவியுமே, இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட பெண், இரண்டு பிள்ளைகளின் தாய் என்பதுடன், படுகொலை செய்யப்படும் போதும் அவர் கர்ப்பம் தரித்திருந்ததாகவும் அவரது வயிற்றில் இரட்டைப் பிள்ளைகள் வளர்ந்து வந்ததாகவும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இன்று பிற்பகல் 1 மணியளவில், படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவரான பாலித்த அபேவர்தன, வீட்டுக்கு வந்து பார்த்ததை அடுத்தே, தனது மனைவியும் தாயும் கொல்லப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

நேற்றிரவு இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்தப் படுகொலையை அடுத்து, 5 மற்றும் ஒன்றரை வயதுகளையுடைய இரு பிள்ளைகளும், இன்று பிற்பகல் தமது தந்தை வீடு திரும்பும் வரையில், சடலங்களுடனேயே இருந்துள்ளன என்றும் தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, மாத்தறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





மாமியாரும் மருமகளும் படுகொலை.. சடலங்களுடன் இரவு - பகலை கழித்த சிறு பிள்ளைகள். மாமியாரும் மருமகளும் படுகொலை.. சடலங்களுடன் இரவு - பகலை கழித்த சிறு பிள்ளைகள். Reviewed by Madawala News on 11/26/2017 06:51:00 PM Rating: 5