Kidny

Kidny

(வீடியோக்கள்) ஈரான் - ஈராக் எல்லையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை குறைந்த பட்சம் 60 பேர் பலி.


ஈரான் - ஈராக் எல்லைப் பகுதியில் 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் குவைத் மற்றும்  கத்தார் வரை உணரப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

ஈராக் பகுதியில் இருக்கும் குர்தீஷ் அரசால் நிர்வகிக்கப்படும் சுலைமணியா நகரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, சுலைமணியாவின் தென் கிழக்குப் பகுதியில் உள்ளூர் நேரப்படி 9.18 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் வீட்டைவிட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தால், இதுவரை 300 பேர் வரை காயமடைந்து குறைந்தபட்சம் 60 பேர் உயிரிழப்பு என   என்று உள்ளூர் செய்தி நிறுவனங்கள் கூறி வருகின்றன. இதனால், ஈராக்கில் பரவலாக மின்சார பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


(வீடியோக்கள்) ஈரான் - ஈராக் எல்லையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை குறைந்த பட்சம் 60 பேர் பலி. (வீடியோக்கள்)  ஈரான் - ஈராக் எல்லையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த  நிலநடுக்கத்தில் இதுவரை குறைந்த பட்சம் 60 பேர் பலி. Reviewed by Madawala News on 11/13/2017 06:17:00 AM Rating: 5