Kidny

Kidny

A.L .நெளபீர் இன் இறக்காமம் கல்வி அரசியல் நூல் வெளியீடு



சமுதாயச் சமத்துவம் (Egalitarianism),  அல்லது சமத்துவச் சமுதாயம் (Egalitarian Society), என்ற சொற்பதங்கள் இன்று அதிகமாகப் பேசப்படுபவை


எந்த சமுதாயத்திற்கும் ஒரு தகுதியும் (Status), அதிகாரமும் (Power), இருக்க வேண்டும்.


இவற்றை நிர்ணயிப்பதில் கல்வியும், அரசியல் அதிகாரமும் முக்கியம் பெறுகின்றன.தேர்தல் காலத்தில் வரும் எல்லோருமே இந்த ஊரை ஆனை கட்டிய தொன்மைச் சமுதாயம் (Primitive Society) என்று அழைப்பதன் அரசியல் கூட இந்த மண்ணின் மைந்தர்களான (Autochthon) எமக்குச் சரியாகப் புரிவதில்லை.


இறக்காமம் கல்வியும் அரசியலும் - என்ற இந்த நூல்  பிறந்து வாழ்ந்த மண்ணின் சமூக ஊடாட்டம் நிறைந்த முக்கிய இரண்டு துறைகள் பற்றிய பார்வை ஆகும்


இந்தப் புத்தகம் இப்பிராந்தியத்தின் தகவல்களை மட்டுமே பேசும் ஒரு தகவல் வங்கியல்ல.அளவுசார் மாறிகளிலும் ( Quantitative Variables )பார்க்க, இப்பிரதேச மக்களின் பண்புசார் மாறிகளைப் பற்றிய (Qualitative Variables) ஒருகருத்தாடலே இது


எமது எழுத்துக்குப் பொதுவாக இரண்டு தனங்கள் இருக்க வேண்டும். ஒன்று வாசிப்புத் (Readability) தனம், மற்றையது எழுத்துத் தனம் (Write-ability) இது எழுத்துத் தனம் நிறைந்த ஒரு படைப்பு என்பதே என் பார்வை.


இந்த ஊரின் புராதனக் கதைகளைக் (Legend) கூறுவதும் நோக்கமல்ல. ந‌டைமுறையிலுள்ள சம காலத்தின் பார்வை என்பதே இது. (Being and Time).


இம்மாதம் 25 ,26 ம் திகதிகளில் வெளிவர இருக்கிறது , இடம்- இறக்காமம் பிரதேச சபை.

A.L .நெளபீர் இன் இறக்காமம் கல்வி அரசியல் நூல் வெளியீடு  A.L .நெளபீர் இன் இறக்காமம் கல்வி அரசியல் நூல் வெளியீடு Reviewed by Madawala News on 11/12/2017 07:32:00 PM Rating: 5