Kidny

Kidny

கருத்து சொன்னால் கைது செய்யலாமா ?இலங்கையில் Facebook Comment ற்கு ஒருவரை கைது செய்யலாமா?


இந்தியாவில் Information Technology act என்ற சட்டம் 2000ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு 2009 ம் ஆண்டு அதற்கு திருத்தம் கொண்டுவரப்பட்டது

அத்திருத்தத்தின் பிரகாரம் பொலிசாரிற்கு பரந்தளவான அதிகாரம் வழங்கப்பட்டதுடன் பொய்யான அல்லது grossly offensive ஆன பதிவுகளை பதிவிடும் நபர்களை கைது செய்யவும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 வருட சிறையும் தண்டப்பணமும் அறவிட ஏற்பாடு செய்தது

இது “electronic spam” போன்ற தேவையற்ற இணைய தாக்குதல்களை கட்டுப்படுத்த அறிமுகப்படுத்தப்பட்டது. இச்சட்டம் என்ன நோக்கத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டதோ அதனை மறந்துவிட்டு அரசியல்வாதிகள் தமக்கு எதிரான கருத்துக்களை சமுக வலைத்தளங்களில் பதிவிடிபவர்களைபொலிசை தூண்டிகைதுசெய்துவேட்டையாடதொடங்கியது

இதனால் சுமார் 20 ற்கும் மேற்பட்ட அதிஉயர் பதவி வகித்தோர் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்கள்

அதிலும்மும்பையில் இறந்துபோன ஒரு சமுகத் தலைவரிற்காக ஒருநாள் கடைகளைப் பூட்டியிருக்க கூடாதுஎன்று Facebook ல் பதிவிட்ட ஒரு இளம் பெண்ணை சில அரசியல்வாதிகளின் தூண்டுதலின் பேரில் பொலிசார் கைது செய்தது மட்டுமன்றி அந்த post வெறுமனே “like” செய்த இன்னொரு இளம்பெண்ணையும் கைது செய்து துன்புறுத்தினர்

இதனால் பாதிக்கப்பட்ட தரப்பு இந்திய உச்ச நீதிமன்றில் மேன்முறையீடு செய்தது
இவ்வழக்கை நன்கு ஆய்ந்தறிந்த நீதியரசர்கள் குறித்த திருத்தச்சட்ட ஏற்பாடு இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது எனவும் கருத்துச் சுதந்திரத்தில்உறைய வைக்கும் விளைவுகளையும் கொண்டுவரும்என கூறி குறித்த ஏற்பாடு சட்ட முரண் என தீர்ப்புகூறி இணைய கைதுகளிற்கு முற்றுப்புள்ளி வைத்தது.

இலங்கையில் ஏதாவது ஒரு சட்டவிடயம் தொடர்பில் வெறுமை காணப்படும் போது இந்திய உயர் நீதிமன்ற தீர்ப்புக்களில் கவனத்தை செலுத்தி அவை எமது நீதிமன்ற தீர்ப்புக்களில் தாக்கத்தை செலுத்துவது ஒன்றும் புதிய விடயம் அல்ல.

இலங்கையில் யாரேனும் ஒருவர்வேண்டுமென்று தீய நோக்கத்துடன் அவதூறான கோபமேற்படுத்தக்கூடிய பதிவுஒன்றை சமுக வலைத்தளம் ஒன்றில் பதிவிட்டாலும்கூட அவரிற்கு எதிராக குற்றவியல் வழக்கு ஒன்றை நான் அறிந்தவரை தாக்கல் செய்ய முடியாது

அவ்வாறான சட்டங்கள் எவையும் இலங்கையில் இல்லை.விரும்பினால் சிவில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்யலாம்.ஆனால் அதிலும் வெல்வது கடினம்.

இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட “computer crimes act. No 24 of 2007 ” இன் பிரிவு 2 அதன் பிரயோகம் பற்றி இவ்வாறு கூறுகிறது.

The provisions of this Act shall apply where—

(a) a person commits an offence under this Act whilebeing present in Sri Lanka or outside Sri Lanka ;

(b) the computer, computer system or information affected or which was to be affected, by the act which constitutes an offence under this Act, was at the material time in Sri Lanka or outside Sri Lanka ;

(c) the facility or service, including any computer storage, or data or information processing service, used in the commission of an offence under this Act was at the material time situated in Sri Lanka or outside Sri Lanka ; or

(d) the loss or damage is caused within or outside Sri Lanka by the commission of an offence under this Act, to the State or to a person resident in Sri Lanka or outside Sri Lanka.

(2) For the purposes of paragraph (d) of subsection (1) “person” includes a body of persons corporate or unincorporate.Short title.
இது “software, hardware ” போன்ற குற்றங்களை தடுக்க அறிமுகப்படுத்தப்பட்டதே தவிர “comment” எழுதுபவர்களை கைது செய்ய கொண்டுவரப்பட்டது அல்ல.

யாரேனும் ஒருநபர் சமுக வலைத்தளத்தில் பதிவிட்ட ஏதேனும் ஒரு “comment ” ற்காக கைது செய்ய முயற்சிப்பதே சட்ட விரோதமான ,சட்ட முரணான ,கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான ,இலங்கை அரசியலமைப்பிற்கு மாறான செயலேயன்றி வேறில்லை. இவ்வாறான “comment கைதுகளைஊக்குவித்தால் அது கருத்துச் சுதந்திரத்திற்கு அடிக்கும் சாவுமணியாகவே அமையும்.

Criminal defamation என்ற தண்டனைப்பிரிவுகள் 480, 481 என்பன Act no.12 of 2002 மூலம் இந்தக் காரணத்திற்காகத்தான் ரத்துச் செய்யப்பட்டது.

உண்மையில் இவ்வாறான “comment arrest” சட்டம் அனுமதித்திருந்தால் அதன் விளைவு என்னவாக இருக்கும் என்றால்,அரசியல்வாதி ஒருவரை கேலி செய்தோ அல்லது வறுத்தெடுத்தோ பதிவிடும் நபர் அவர் யாராக இருந்தாலும் ஒரு சிறிய முறைப்பாட்டின் மீது கைது செய்யப்படுவார்.

மகிந்த ராஐபக்சவை கடந்த தேர்தல்களில் சமுக வலைத்தளங்களில்கிழி கிழிஎன கிழித்த அத்தனை பேரும்கம்பி எண்ணவேண்டி வந்திருக்கு.

இதனால்தான் கருத்துச் சுதந்திரம்அடிப்படை உரிமையாகஎமது அரசியலமைப்புச் சட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது.

Stanislaus Celestine.LL.B ( Colombo)
Attorney at Law

கருத்து சொன்னால் கைது செய்யலாமா ?  கருத்து சொன்னால் கைது செய்யலாமா ? Reviewed by Madawala News on 11/26/2017 11:46:00 AM Rating: 5