Kidny

Kidny

பைஸர் முஸ்தபாவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்.


எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்று கொண்டு வரப்படவள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

இன்று(23) கொழும்பில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்துக்கொண்ட கட்சியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை சபாநாயகரிடம் கையளிக்கும் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை பிற்போடுவது தொடர்பாகவே அதற்கு பொறுப்பான அமைச்சரான பைஸர் முஸ்தபாவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரவுள்ளதாகவும்,எனவே குறித்த யோசனையை முன்வைப்பதற்கு ஏனைய அரசியல் கட்சிகளும் இணைய வேண்டும் என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளர் வேண்டு​​கோள் விடுத்துள்ளார்
பைஸர் முஸ்தபாவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம். பைஸர் முஸ்தபாவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம். Reviewed by Madawala News on 11/23/2017 01:52:00 PM Rating: 5