Kidny

Kidny

புத்தளம் பஸ்னூன் (வயது 29) இன்று காலை வபாத்தானார்.


மன்னார் விடத்தல்தீவை பிறப்பிடமாகக் கொண்டதோடு புத்தளம்-கரம்பையில் வசித்துவந்த பஸ்னூன் பீர் (வயது 29) இன்று அதிகாலை யாழ்ப்பாண வைத்தியசாலையில் வைத்து வபாத்தாகிவிட்டார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

கல்/உலுக்காப்பள்ளம் நவோதயா பாடசாலையில் கல்விகற்ற ஓர் பழைய மாணவரான இவர்,

தொழில் நிமித்தம் மலேசியாவிற்குச் சென்று பல வருடங்கள் நன்றாக வேலை செய்துகொண்டிருக்கும் வேளையில் காலில் சிறு புண் ஏற்பட்டதையடுத்து அங்குள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றும் பலனில்லாத நிலையைக் கண்டதும் தாயகம் திரும்பி காலியிலுள்ள வைத்தியசாலையொன்றில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டு ஓரளவு குணமடைந்திருந்த தருணத்தில்,

 மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் செல்ல வேண்டி ஏற்பட்டது, இவ்வாறு அங்கு ஒவ்வொரு கிழமையும் சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில் தான் இன்று அதிகாலை அல்லாஹ் இவரது உயிரை தன் பக்கம் எடுத்துக்கொண்டான்.

உலுக்காப்பள்ள பாடசாலையில் கற்கின்ற காலத்திலும் அதன் பின்னரும் அனைவருடனும் அன்பாக பண்பாக புரிந்துணர்வுடன் பழகுவதோடு தன்னைச் சூழவுள்ள அனைவருக்கும் சிரிப்பூட்டும் கதைகள் கூறி என்றும் ஆனந்தமாக வைத்திருப்பார், மேலும் கூறுமிடத்து நோய்வாய்ப்பட்டிருந்த இக்காலகட்டத்தில் கூட தனது சோகத்தை வெளிக்காட்டாது சந்தோசத்தை வெளிக்காட்டும் வண்ணம் மன உறுதியுடனும் மகிழ்ச்சியுடனும் பேசுபவராக காணப்பட்டார்.

இத்தகைய அழகிய பண்புகளை தன்னகத்தே கொண்ட அன்பு நண்பனை இழந்து தவிக்கும் நாம், அல்லாஹ்வின் விதியை நம்பிக்கை கொண்டுள்ள நாம் இவ்விழப்பையும் ஈமானிய உணர்வுடன் ஏற்றுத்தான் ஆக வேண்டியுள்ளது, ஆதலால் நண்பர் பஸ்னூனின் மறுமை வாழ்வு சிறக்க கட்டாயம் நாம் அவருக்காக பிரார்த்திப்போம்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ்  இன்றுமாலை நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

اللهم اغفر له وارحمه وعافه واعف عنه وأكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد ونقه من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس، اللهم ابدله دارا خيرا من داره وأهلا خيرا من أهله وزوجا خيرا من زوجه وأدخله الجنة وأعذه من عذاب القبر ومن عذاب النار

நட்புடன்
Azhan Haneefa
Ulukkappallam-Puttalam
புத்தளம் பஸ்னூன் (வயது 29) இன்று காலை வபாத்தானார். புத்தளம் பஸ்னூன் (வயது 29) இன்று காலை வபாத்தானார். Reviewed by Madawala News on 11/21/2017 11:47:00 AM Rating: 5