Kidny

Kidny

தனது வீட்டிற்கே தீவைத்து விட்டு தப்பிச் சென்ற நபர். அனைத்து பொருட்களும் தீக்கிரை.


தம்புள்ளை லெனதொர பகுதியில் வீடு ஒன்றிற்கு தீ வைத்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

பல வருடங்களாக மதுவிற்கு அடிமையான ஒருவர் நேற்றைய தினம் அதிகமாக மது அருந்திவிட்டு வீட்டிற்கு வருகை தந்துள்ளார்.

குறித்த நபர் வீட்டில் காணப்பட்ட ஒரு வகை திரவத்தினை ஊற்றி தனது வீட்டிற்கு தீவைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இதனால் வீட்டிலுள்ள அனைத்து பொருட்களும் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயணைப்பு பிரிவினர் மற்றும் பிரதேச வாசிகளின் உதவியுடன் தீ கட்டுபாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
தனது வீட்டிற்கே தீவைத்து விட்டு தப்பிச் சென்ற நபர். அனைத்து பொருட்களும் தீக்கிரை. தனது வீட்டிற்கே தீவைத்து விட்டு தப்பிச் சென்ற நபர். அனைத்து பொருட்களும் தீக்கிரை. Reviewed by Madawala News on 11/24/2017 10:06:00 AM Rating: 5