Kidny

Kidny

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல் ரணிலுடைய ஆட்சிக்கு சாவுமணியாக வேண்டும்!


நல்லாட்சி வந்தால் ஞானசார தேரரை நாய்க் கூண்டில் அடைப்போம் என்ற
கோசத்தோடு பின்கதவால் ஆட்சிக்கு வந்த ரணிலுடைய நரியாட்சிக்கு முஸ்லிம்கள் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்


அதற்கான ஒரு சந்தர்ப்பமாக எதிர்வரும் தேர்தலை பாவிக்க வேண்டும். இச்சந்தர்ப்பத்தை தவறவிட்டு மீண்டுமொரு தேர்தல் வரும் வரை காத்திருந்தால் முஸ்லிம்கள் சொந்த நாட்டிற்குள் அகதியாகும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும். எனவே எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல் ரணிலுடைய ஆட்சிக்கு சாவுமணியாக வேண்டும்!


ஏலவே எம்மத்தியில் இருந்து நல்லாட்சி கோசத்தோடு பாராளுமன்றம் சென்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் திருத்தங்கள், யோசனைகளுக்கு ஆதரவு வழங்கிவரும் சூழ்நிலையில், இந்த ஆட்சியில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான வான்முறை நடவடிக்கைகளுக்கு எதிராக அரசாங்கத்தின் பங்காளிகளாக இருந்தும் தடுத்து நிறுத்த தவறிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை ஞாபகத்தில் வைத்து அவர்கள் சார்ந்த கட்சிகளுக்கும் இத் தேர்தல் ஊடாக தண்டனை வழங்க முஸ்லிம் சமூகம் முன்வர வேண்டும்


மட்டுமல்ல தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் முஸ்லிம்களை மென்மேலும் எமாற்றிவருவதும் வெளிநாட்டு நிகழ்ச்சி நிரழ்களுக்கு இயங்கிவரும் ரணிலுடைய பங்காளியாகவும், கூட்டாளிகளாகவும் இருந்து முஸ்லிம் சமூகத்தை காட்டிக்கொடுக்கும் அதேவேளை முஸ்லிகளின் அரசியல் அடையாளத்தை இல்லாமல் செய்யுமுகமாக அரசியலில் முஸ்லிம்கள் பிரதிநிதித்துவ எண்ணிக்கை குறைப்புகளுக்கும், வடகிழக்கு இணைப்பிற்கும், துணைபோகும் கயவர்கள் யாராக இருந்தாலும் முஸ்லிம் சமூகத்தால் தயவுதாட்சணையின்றி இத்தேர்தல் ஊடாக தூக்கிவீசப்பட வேண்டும்.


புதிய அரசியலமைப்பு திருத்தமானது மீண்டும் இந்த நாட்டை யுத்த பூமியாக்கும் தமிழ் டயஸ்போரா மற்றும் அமெரிக்க சியோனிச கொள்கையாளர்களின் தந்திரோபாய நடவடிக்கையாக இருப்பதை காணமுடிகிறது.
எனவே மீண்டும் மீண்டும் உணர்ச்சிகளுக்கு அடிமைப்படாமல் சிந்தித்து முடிவெடுக்கும் அதே வேளை அரசியல் யுக மாற்றத்திற்கும் வித்திடும் தேர்தலாக புதியவர்கள், சமூகப்பற்றாளர்களை, அல்லாஹூவுக்கு பயந்தவர்களை , தெரிவுசெய்யும் தேர்தலாக எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலை முஸ்லிம்கள் பாவிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் 


அஹமட் புர்கான்
கல்முனை

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல் ரணிலுடைய ஆட்சிக்கு சாவுமணியாக வேண்டும்! எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல் ரணிலுடைய ஆட்சிக்கு சாவுமணியாக வேண்டும்! Reviewed by Madawala News on 11/03/2017 12:24:00 PM Rating: 5