Kidny

Kidny

கொழும்பு உற்பட பல இடங்களில் எரிபொருள் தட்டுப்பாடு.. பல இடங்களில் நீண்ட கியூ.


கொழும்பு உற்பட பல இடங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும்  பல இடங்களில் நீண்ட கியூ காணப்படுவதாகவும் தெரிய வருகிறது.

2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக எரிபொருளின் விலை குறைக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இவ்வாறு வெளியான செய்தியைத் தொடர்ந்து, எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருள் கொள்வனவு செய்வதனை திடீரென நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கூடிய விலையில் எரிபொருளை கொள்வனவு செய்து, வரவு செலவுத்திட்டத்தில் எரிபொருளின் விலை குறைவடைந்தால் அது தமக்கு நட்டத்தை ஏற்படுத்தும் என்ற நோக்கிலேயே எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் எரிபொருள் கொள்வனவை நிறுத்தியுள்ளனர்.

இதனால் கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதனால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெரும் வாகன நெரிசல் காணப்படுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை, எரிபொருள்விலை கூடுதல் அல்லது வேலை நிறுத்தம் ஒன்று இன்றிரவு ஏற்படும் என அஞ்சப்படுவதால் தான் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால்தான்  பல இடங்களில் நீண்ட கியூ காணப்படுவதாகவும் மற்றுமொரு தகவலில் தெரிவிக்கபடுகிறது.

கொட்டாஞ்சேனை பகுதியில் பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் விற்பனை இடம்பெற்று வருவதாகவும் எமது செய்தியாளர் கூறினார்.

கொழும்பு உற்பட பல இடங்களில் எரிபொருள் தட்டுப்பாடு.. பல இடங்களில் நீண்ட கியூ. கொழும்பு உற்பட பல இடங்களில் எரிபொருள் தட்டுப்பாடு.. பல இடங்களில் நீண்ட கியூ. Reviewed by Madawala News on 11/03/2017 07:30:00 PM Rating: 5