Kidny

Kidny

கிந்­தோட்டை வன்­மு­றைகள் தொடர்பில் கைதா­னோரை விடு­விக்க பொலி­ஸா­ருக்கு உயர்­மட்ட அர­சியல் அழுத்தம்.


(எம்.எப்.எம்.பஸீர்)

காலி, - கிந்­தோட்டை பகு­தியில் சிங்­கள - முஸ்லிம் சமூ­கங்­க­ளுக்கு இடையே ஏற்­பட்ட முறுகல் நிலைமை வன்­மு­றை­யாக மாறி­யதால் பதி­வான அசம்­பா­வித சம்­ப­வங்கள் தொடர்பில் பொலி­ஸாரால் கைது செய்­யப்பட்ட சந்­தேக நபர்­களை விடு­விக்க உயர் மட்ட அர­சியல் அழுத்­தங்கள் பிர­யோ­கிக்­கப்பட்டு வரு­வ­தாக அறிய முடி­கின்­றது.

வன்­மு­றைகள் பதி­வான கிந்­தோட்டை பொலிஸ் பிரி­வுக்குட்­பட்ட கிந்­தோட்டை மேற்கு, கிந்­தோட்டை கிழக்கு, குருந்­து­வ த்த, மஹ ஹப்­பு­கல, வெலி­பிட்டி, மோதர, உக்­வத்த, பிய­தி­கம ஆகிய கிரா­ம­சே­வகர் பிரி­விலும் தொடர்ச்­சி­யாக பாது­க­ாப்பு பலப்

படுத்தப்பட்டுள்ள நிலையில், பிர­தே­சத்தில் சுமு­க­மான சூழலை ஏற்­ப­டுத்­து­வதை கார ணம் காட்டி, வன்­மு­றை­களில் ஈடு­பட்­ட­மை

க்­காக கைது செய்­யப்பட்ட இரு சமூ­கங்­க­ளை யும் சேர்ந்த 22 பேரையும் இவ்­வாறு விடு­வித்­துக்­கொள்ள அர­சியல் ரீதி­யி­லான காய் நகர்த்­தல்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

பொலிஸ் விசா­ர­ணை­களில் இந்த வன்­மு­றைகள் அடிப்­படை வாத சக்­தி­களின் பின்­ன­ணியில் இடம்­பெற்­றுள்­ளமை உறு­தி­யா­கி­யுள்ள நிலையில் இனங்­க­ளுக்கு இடையே விரி­சலை ஏற்­ப­டுத்தும் இத்­தகைய நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ராக கடும் நட­வ­டிக்­கை எடுக்க பல தரப்­பினரும் பொலி­ஸா­ரிடம் கோரிக்கை முன்­வைத்­துள்­ளனர். இந் நிலையில் கைதா­னோ­ருக்கு எதி­ராக பொலி ஸார் 2007 ஆம் ஆண்டின் 54 ஆம் இலக்க சிவில் மற்றும் அர­சியல் உரி­மைகள் தொடர்­பி­லான சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­ட த்தின் கீழ் நீதி­மன்றில் குற்றம் சுமத்தி­யுள்ள நிலையில், அழுத்தம் கார­ண­மாக அச்­சட்ட பிரிவின் கீழான குற்­றச்­சாட்­டுக்­களை மீளப் பெறும் நிலை­மையும் உரு­வ­ா கியுள்­ள­தாக பொலிஸ் தலை­மை­யக தக­வல்கள் ஊடாக அறிய முடி­கின்­றது.


2007 ஆம் ஆண்டின் 54 ஆம் இலக்க சிவில் மற்றும் அர­சியல் உரி­மைகள் தொடர்­பிலான சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் கீழ் நீதிவான் நீதி­மன்றில் பிணை பெறமுடி­யாது என்­பதால் அதனை மீளப் பெற்று தண்­டனை சட்டக் கோவையின் கீழான பிணை பெறத் தக்க குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைப்­பதும், சந்­தேக நபர்கள் சார்பில் பிணை கோரும் போது அதனை எதிர்க்­காமல் இருப்­பது தொடர்­பிலும் உயர் மட்ட அர­சியல் அழுத்­தங்கள் பொலி­ஸா­ருக்கு பிர­யோ­கிக்­கப்பட்­டுள்­ளன.

இது தொடர்பில் கடந்த செவ்­வா­ய் க்கிழமை இடம்­பெற்ற அமைச்­ச­ரவை கூட்­டத்தின் பின்னர் காலி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் ஜனா­தி­ப­திக்கும் இடை­யி­லான விசேட கலந்­து­ரை­யா­டலின் போதும் அவ­ தானம் செலுத்­தப்பட்­டி­ருந்­த­தாக அறிய முடி­கின்­றது.

கிந்­தோட்­டையில் கடந்த 17 ஆம் திகதி இடம்­பெற்ற வன்­மு­றை­களின் போது மொத்­த­மாக 127 சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ளன. குறிப்­பாக வன்­மு­றை­களின் போது சிங்­கள, முஸ்லிம் சமூ­கத்­த­வர்­க­ளுக்கு சொந்­த­மான 81 வீடுகள், 18 வர்த்­தக நிலை­யங்கள் சேதப்­ப­டுத்­தப்பட்­டுள்­ளன. அத்­துடன் 6 முச்­சக்­கர வண்­டி­களும் ஒரு லொறியும் வேன் ஒன்றும் 8 மோட்டார் சைக்­கிள்­களும் சேத­ப்ப­டுத்­தப்பட்­டுள்­ளன. இத­னை­விட நான்கு பள்­ளி­வா­சல்­களும் இதன்­போது தாக­்கு­த­லுக்கு உள்­ளா­கி­யுள்­ள­துடன் 8 திருட்டு சம்­ப­வங்­களும் பதி­வா­கி­யுள்­ளன.

 இந் நிலையில் இவை தொடர்பில் தென் பிராந்­திய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்­ளியூ.எப்.யூ. பெர்­னாண்­டோவின் மேற்­பா­ர­்வையில் காலி பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்­தன அழ­க­கோனின் கட்­டுப்­பாட்டில் விசா­ர­ணைகள் நடைபெறு­கின்­றன. அதில் 13 ஆம் திகதி முதல் 16 ஆம் திக­தி­வரை அப்­ப­கு­தியில் இடம்­பெற்ற தாக்­கு­தல்கள், தீவைப்பு சம்­ப­வங்கள் கடந்த 17 ஆம் திகதி சுமுக நிலையை எட்­டி­யி­ருந்­த­தாக நம்­பப்­பட்­டது. இவ்­வா­றான பின்­ன­ணியில் 17 ஆம் திகதி இரவு 7.30 மணிக்கு அங்கு வன்­மு­றைகள் பாரிய அளவில் பதி­வாக ஆரம்­பித்­தன. கிந்­தோட்டை தூபா­ராம விகா­ரையில் ஒன்று கூடி­யுள்ள சிங்கள குழு­வொன்று தாக்­கு­தலுக்கு தயா­ரா­ன­மையும், அவர்கள் அந்த விகா­ரையில் இருந்த தேரர்

கள் இரு­வரால் தூண்டப்பட்டுள்ள நிலை யில் அன்று இரவு கிந்­தோட்டை முழுதும் வன்­மு­றைகள் பதி­வா­கி­ய­மையும் பொலிஸ் விசா­ர­ணை­களில் கண்­ட­றி­யப்­பட்­டன. எனி னும் வன்­மு­றையை தூண்டிய குறித்த இரு தேரர்­களும் இது­வரை கைது செய்­யப்­ப­ட­வில்லை.

 வன்­மு­றை­களின் பின்னர் பிர­தே­சத்­துக்கு விஜயம் செய்த பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர, அமைச்சர் சாகல ரத­்நா­யக்க, பிர­த மர் ரணில் விக்கி­ரம­சிங்க ஆகியோர் வன்­மு­றை­க­ளுடன் தொடர்­பு­டைய அனை­வரும் சட்­டத்தின் முன் பாகு­பா­டின்றி நிறுத்­த­ப்படுவர் எனவும், யாரு க்கும் எந்த தயவு தாட்­சண்யமு­ம் காட்­டப்­ப­ட­மாட்­டது எனவும் வாக்­கு­றுதி அளிக்­கப்பட்­டி­ருந்­தது. அந்த பின்­ன­ணியி­லேயே தற்­போது, குற்றச்­சாட்­டுக்­களை மாற்­றி­ய­மைத்து சந்­தேக நபர்­க­ளுக்கு பிணை பெற்­றுக்­கொ­டுக்க பொலி­ஸா­ருக்கு அழுத்தம் பிர­யோ­கிக்­கப்பட்டு வரு­வ­தாக அறிய முடி­கின்­றது.

கிந்­தோட்டை பகு­தியில் 17 ஆம் திக­திக்கு முன்னர் இடம்­பெற்ற சம்­ப­வங்கள் தொடர்பில் பிர­தேச சபை முன்னாள் உறுப்­பி­ன­ரான முஸ்லிம் ஒருவர் உள்­ளிட்ட மூவர் கைது செய்­யப்பட்டு எதிர்­வரும் 30ஆம்

திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்பட்­டுள்­ளனர். இந் நிலையில் 17 ஆம் திகதி வன்­மு­றைகள் தொடர்பில் பொலிஸார் 19

பேரை 17 ஆம் திகதி இர­வோ­டி­ர­வாக கைதுசெய்­தி­ருந்­தனர். அவர்­களில் 16 சிங்­க­ள­வர்­களும் 3 முஸ்லிம்களும் அடங்குகின்றனர். இவர்களுக்கு எதிராக 2007 ஆம் ஆண்டின்54 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல்

உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக் கப்பாட்டு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு எதிர்வரும் 30 ஆம் திகதிவரை அவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந் நிலையில் கிந்

தோட்டை விவகாரம் தொடர்பில் சமூகவலைத்தளங்கள் ஊடாக வதந்தி பரப்பியோரைக் கைது செய்ய சி.ஐ.டி. விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், வன்முறைகளு க்கு காரணமானவர்களை பாதுகாக்க உயர் மட்ட அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வரு வது அவதானத்துக்குரியதாகும்.
கிந்­தோட்டை வன்­மு­றைகள் தொடர்பில் கைதா­னோரை விடு­விக்க பொலி­ஸா­ருக்கு உயர்­மட்ட அர­சியல் அழுத்தம். கிந்­தோட்டை வன்­மு­றைகள் தொடர்பில் கைதா­னோரை விடு­விக்க பொலி­ஸா­ருக்கு உயர்­மட்ட அர­சியல் அழுத்தம். Reviewed by Madawala News on 11/24/2017 02:32:00 PM Rating: 5