Kidny

Kidny

'எலிய' அமைப்பானது இந்த நாட்டின் எதிர் காலத்தின் மீதான கரிசனையின் பேரிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இதனை இனவாத அமைப்பாக சித்தரிக்க வேண்டாம்.


சிரேஷ்ட அரசியல்வாதியான எதிர்க்கட்சித் தலைவர், 'எலிய' அமைப்பினை இனவாத அமைப்பாக
சித்திரிக்கின்றமையானது கவலையளிப்பதாக தெரிவித்துள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, எதிர்க்கட்சித்தலைவரை விடவும் தமிழ் மக்களுக்காக அதிகமான ஈடுபாட்டுடன் செயற்பட்டுள்ளேன் எனவும் சுட்டிக் காட்டினார்.

புதிய அரசியலமைப்புக்கு எதிரான மக்களை விழிப்புணர்வூட்டும் கருத்தரங்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை அநுராதபுரத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், எலிய அமைப்பானது இந்த நாட்டின் எதிர் காலத்தின் மீதான கரிசனையின் பேரிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே நான் இந்த அமைப்புடன் இணைந்து அதிகளவில் செயற்பட்டு வருகின்றேன்.

அவ்வாறு இருக்கையில் எலிய அமைப்பானது இனவாத அமைப்பு என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

எதிர்க்கட்சித்தலைவர் ஒரு சிரேஷ்டத்து வமான அரசியல்வாதியாவார். அவர் ஏன் அவ்வாறு கூறுகின்றார் என்று எனக்குத் தெரியவில்லை. முப்பது வருடங்களாக இந்த நாட்டில் யுத்தம் நீடித்தமையால் என்னால் தமிழ் மக்களுக்கான சேவையை முன்னெடுக்க முடியாதிருந்தது.

அந்த நேரத்தில் எவ்வாறான இனவாத நிலைமைகள் இருந்தன என்பதை அவர் அறிவார். அதன் பின்னர் யுத்தம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் தமிழ் மக் களின் மீள் கட்டு மானம் உள்ளிட்ட அனைத்து விடயங் களுக்கும் என்னாலான செயற்பாடுகளை அதிகமான ஈடு பாட்டுடன் செய்துள்ளேன்.


அதனை அந்த மக்கள் நன்கறிந்துள்ளனர். இவ்வாறான நிலையில் தற்போது புதிய அரசியலமைப்பொன்று உருவாக்கப்ப டுகின்றது.

இந்த அரசியலமைப்பானது நாட்டிற்கு அவசியமற்றதொன்று என்பதே எனது நிலைப்பாடாகும். தற்போதைய சூழலில் தமிழ் மக்களுக்கு அரசியலமைப்பு குறித்த பிரச்சினைகள் இல்லை. அவர்கள் அதனைக் கோரவுமில்லை.

ஆனால் தமிழ் அரசியல்வாதிகள், கடந்த காலங்களில் பிரி வினையை மையப்படுத்திய பிரபாகரனால் செய்ய முடியாது போன விடயத்தினை தற்போது செய்ய முனைகின்றார்கள்.

நாட் டினை பிளவுபடுத்துவதற்கு திட்டம் தீட்டு கின்றார்கள். இவ்வாறான செயற்பாடானது எமது நாட்டில் பாரதூரமான விளைவினை ஏற்ப
டுத்தும். ஆகவே தான் நாம் புதிய அரசியல மைப்பு அவசியமில்லை என்பதனை மக்க ளுக்கு தெளிவுபடுத்தி வருகின்றோம்.


தமிழ் மக்களை நாம் ஓரங்கட்டவில்லை. அவர் களை அடக்குமுறைக்குள் தள்ளவில்லை. அவர்களுக்கு பிரச்சினைகள் இருந்தால் அவற்றை கூறுமிடத்து தீர்வுகளை வழங்குவ தற்கு தயாராகவே இருக்கின்றோம். அத்தகைய நிலைமையில் புதிய அரசி யலமைப்பு அவசியமில்லை என்று வலியு றுத்திக் கூறுகின்றோம்.


மேலும் மாநாயக்க தேரர்கள், புத்திஜீவிகள் மட்டத்தில் இந்த அரசியலமைப்பு நிச்சயமாக நாட்டினை பிளவுபடுத்தும் சூட்சுமமான விடயங்களை கொண்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. அவர் கள் உடனடியாக புதிய அரசியலமைப்புக் கான செயற்பாடுகளை நிறுத்துமாறு கோரியுள்ளனர்.

அத்தகைய நிலையில் ஏன் இவ்வாறு அவசர அவசரமாக புதிய அரசிய லமைப்புக்குரிய செயற்பாடுகளை மேற் கொள்ள வேண்டும்? ஆகவே உடனடியாக புதிய அரசியல மைப்புக்கான செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் என்று கோருகின்றேன். இது தொடர்பாக மக்கள் விழிப்புணர்வாக இருக்குமாறும் கோருகின்றேன் என்றார்.

'எலிய' அமைப்பானது இந்த நாட்டின் எதிர் காலத்தின் மீதான கரிசனையின் பேரிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இதனை இனவாத அமைப்பாக சித்தரிக்க வேண்டாம். 'எலிய' அமைப்பானது இந்த நாட்டின் எதிர் காலத்தின் மீதான கரிசனையின் பேரிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இதனை இனவாத அமைப்பாக சித்தரிக்க வேண்டாம். Reviewed by Madawala News on 11/27/2017 02:12:00 PM Rating: 5