Kidny

Kidny

இன்று அதிகாலை ஆட்டுக் கொட்டிலுக்கு தீ வைத்து எரிப்பு. 5 ஆடுகளும் தீயில் கருகி பலியான சம்பவம்.


திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவு, முள்ளிப் பொத்தானை பிரதேசத்தில் 228 ஜீ கிராம சேவையாளர் பிரிவில் ஆட்டுக் கொட்டிலொன்று, இன்று (25) அதிகாலை 3.30 மணியளவில் இனந்தெரியாதோரால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

இதனால் இக்கொட்டிலில் இருந்த பெரிய ஆடுகள் 5 தீயில் கருகி இறந்துள்ளனவென, தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தம்பலகாமம் பொலிஸார், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று அதிகாலை ஆட்டுக் கொட்டிலுக்கு தீ வைத்து எரிப்பு. 5 ஆடுகளும் தீயில் கருகி பலியான சம்பவம். இன்று அதிகாலை ஆட்டுக் கொட்டிலுக்கு தீ வைத்து எரிப்பு. 5  ஆடுகளும் தீயில் கருகி பலியான சம்பவம். Reviewed by Madawala News on 11/25/2017 11:34:00 AM Rating: 5