Kidny

Kidny

யாழில் பணவசதி இல்லாத விவசாயிகளின் காணிகளை இராணுவம் உழுது கொடுக்கும் நிகழ்வு.


-பாறுக் ஷிஹான்-

நல்லிணக்கத்தின்  ஊடான சுபீட்சம்  உழவு விழா கடந்த புதன்கிழமை(01) யாழ்மாவட்ட அரசாங்க
அதிபர் தலையில் திருநெல்வேலியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இராணுவத்தின் பங்களிப்புடன் இவ் செயற்றிட்டம் யாழ்மாவட்டத்தில் முதற்கட்டமாக ஐந்து பிரதேச செயலர் பிரிவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் முதல் நிகழ்வு  திருநெல்வேலி ஜே.114 கிராம சேவையாளர் பிரிவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

காணிகள் இருந்தும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் 55 விவசாயிகளின் 80 ஏக்கர் நிலப்பரப்புக்களை பதப்படுத்தி கொடுக்க இராணுவத்தினர் முன்வந்துள்ளனர். இதன் ஒவ்வொரு ஏக்கருக்கும் 15ஆயிரம் ரூபா செலவிடப்படுகிறது.

கௌரவ ஜனாதிபதி அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட நிகழ்வின் இரண்டாம் கட்டம் இது ஆகும்.

கோப்பாயில் அமைந்துள்ள 51வது படைப்பிரின் கீழ் காணப்படும் விவசாயிகளின் குடும்பங்கள் நல்லூர் பிரதேச செயலாளர் மூலம் தெரிவு செய்யப்பட்டிருந்துது.

படைப்பிரிவின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மேர்வின் பெரேரா அவர்களின் ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் திரு நாகலிஙகம் வேதநாயகன் அவர்களின் ஒத்துழைப்புடன் யாழ்ப்பாண பிரதேசத்தின் நல்லூர், வேலணை, ஊர்காவற்துறை, உடுவில்,தெல்லிப்பளை பிரதேசங்களில் உள்ள விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டனர்.

தற்சமயம் பயண்பாட்டில் இல்லாத விவசாய நிலங்களை பதப்படுத்தி விளைநிலங்களாக மாற்றும் பணியினை ஆரம்பித்து வைப்பததுடன் நாட்டின் உற்பத்தி வளத்தினை பொருளாதார ரிதீயாக முண்னெடுப்பதே இதன் பிரதான செயற்பாடு ஆகும்.

இந் நிகழ்வில் மேலதிக அரசாங் அதிபர் (காணி) சுப்பிரமணியம் முரளிதரன், யாழ்மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாரட்சி, நல்லூர் பிரதேச செயலர் அன்ரன் எழிலரசி யோகநாயகம் மற்றும் அரச அதிகாரிகள் விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.
யாழில் பணவசதி இல்லாத விவசாயிகளின் காணிகளை இராணுவம் உழுது கொடுக்கும் நிகழ்வு. யாழில் பணவசதி இல்லாத விவசாயிகளின்  காணிகளை இராணுவம் உழுது கொடுக்கும் நிகழ்வு. Reviewed by Madawala News on 11/04/2017 12:18:00 PM Rating: 5