Kidny

Kidny

ஹெரோய்னுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது. #திருகோணமலை


(ஹஸ்பர் ஏ ஹலீம்)

திருகோணமலை சமுத்ராகம பகுதியில் வைத்து 60 மில்லி கிராம் ஹெரோய்னுடன் 6ம் கட்டை
கப்பல் துறைப் பகுதியைச் சேர்ந்த வயது45 குடும்பஸ்தர் ஒருவர் கைது இன்று(04) கைது செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.ஐ.ஜனோசன் தெரிவித்தார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே குறித்த நபர் கெரோயினுடன் வாங்கிவரும் சந்தர்ப்பத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அவரிடம் இருந்து 60 மில்லி கிராம் கெரோயின் மீட்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர் திருகோணமலை தலைமையகப் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டதாகவும் மேலும் திருகோணமலை நீதிமன்றுக்கு ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவூம் திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

ஹெரோய்னுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது. #திருகோணமலை ஹெரோய்னுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது. #திருகோணமலை Reviewed by Madawala News on 11/04/2017 02:54:00 PM Rating: 5