Kidny

Kidny

மாவனல்லை -ஹிங்குளோயா வக்பு சொத்து முறைகேடு ( அப்டேட்)


மாவனல்லை ஹிங்குளோயா மஸ்ஜிதுல் ஹுதா ஜும்ஆ மஸ்ஜித் மற்றும் அதன் கீழ் இயங்கும் மஹவத்த மஸ்ஜிதுல் ஜென்னா ஜும்ஆ மஸ்ஜித் ஆகிய இரு பள்ளிவாசல்களிலும் வக்பு சொத்துக்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், வரவு – செலவு கணக்கில் குழறுபடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறி தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் அலுவல்கள் அமைச்சர் ஏ.எச்.எம். ஹலீமிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


ஹிங்குளோயா மக்கள் எழுச்சி மன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை அமைச்சர் ஹலீமை நேரடியாக சந்தித்து மேற்படி முறைப்பாட்டை ஊர் ஜமாஅத் சார்பில் முன்வைத்தது.

இதேவேளை, ஹிங்குளோயா மஸ்ஜிதுல் ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாக சபைக்கு எதிராக 2012ஆம் ஆண்டு மேற்படி அமைப்பால் தொடுக்கப்பட்டிருந்த வழங்கின் தீர்ப்பு வழங்கப்படாத நிலையில் குறித்த பள்ளிவாசலின் புதிய நிர்வாகத்துக்கு இலங்கை வக்பு சபை அனுமதி வழங்கியுள்ளது. இது சட்டத்துக்கு முரணான ஒருதலைப்பட்சமான தீர்மானம் எனவும் அமைச்சர் ஹலீமிடம் அவ்வமைப்பு குற்றம்சாட்டியது.


இதனால், இலங்கை வக்பு சபைத் தலைவர் சட்டத்தரணி யாசீன் மற்றும் முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.ஆர்.எம். மலிக் (நளீமி) ஆகியோரை தனது அமைச்சுக்கு அழைத்து குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடிய அமைச்சர் ஹலீம், ஹிங்குளோயா மஸ்ஜிதுல் ஹுதா ஜும்ஆ பள்ளிவாசலின் புதிய நிர்வாக சபைக்கு வக்பு சபை வழங்கியுள்ள அனுமதியை மீளப்பெற நடவடிக்கை எடுப்பதாகவும், வழங்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் நீதியான விசாரணையொன்று மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.


அரசியல், சட்டம் மற்றும் அநீதிகளுக்கு எதிராக மக்களை விழிப்புணர்வூட்டி தெளிவூட்டும் வகையில் மாவனல்லையில் உள்ள புத்திஜீவிகளையும், துறைசார் நிபுனர்களையும் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட மக்கள் எழுச்சி மன்றம் என்ற அமைப்பு கடந்த காலங்களில் பள்ளிவாசல்களில் இடம்பெற்ற பல்வேறு முறைகேடுகள் தொடர்பில் ஆதாரபூர்வமாக கண்டறிந்து அது தொடர்பில் மக்களை தெளிவூட்டும் பாரிய பொறுப்பை செய்து வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

-a.m rayees hassan-
மாவனல்லை -ஹிங்குளோயா வக்பு சொத்து முறைகேடு ( அப்டேட்) மாவனல்லை -ஹிங்குளோயா  வக்பு சொத்து முறைகேடு ( அப்டேட்) Reviewed by Madawala News on 11/08/2017 04:29:00 PM Rating: 5