Kidny

Kidny

இப்போ மஹிந்த ஆட்சி காலத்தில் மாதிரி இல்லை.. இலங்கையர்களுக்கு இணையம் பாவிக்க பூரண தனிப்பட்ட சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.


இலங்கையில் கடந்த மஹிந்த ஆட்சி காலத்தில் இணையத்துக்கிருந்த கட்டுப்பாடுகளை நல்லாட்சி அரசு தகர்த்தெறிந்துள்ளது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இணையத்தளத்தைப் பயன்படத்துவதற்கு பூரண தனிப்பட்ட சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது, நிலைபேண்தகு அபிவிருத்தியை அடைவதற்காக சர்வதேச நாடுகளுடன் கைகோர்த்து இணையத்தளப் பாதுகாப்பை பலப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியத் தலைநகர் புதுடில்லியில் நேற்று ஆரம்பமாகிய ஜி.சி.சி.எஸ். உச்சிமாநாட்டில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

சைபர் ஸ்பேஸ் (ஜி.சி.சி.எஸ்.) உலகளாவிய மாநாட்டில் சர்வதேச தலைவர்கள், இராஜதந்திரிகள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில் வல்லுநர்கள், சைபர் வழிகாட்டிகள் (இணைய வழிகாட்டிகள்) என 100இற்கும் அதிகமான நாடுகளிலிருந்து பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இலங்கையில் முன்னாள் அரசின் காலத்தில் இணைய சுதந்திரம் கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலேயே காணப்பட்டது. ஆனால், 2015ஆம் ஆண்டு எமது அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் இணையத்தளப் பாவனைக்கு விதிக்கப்பட்டிருந்த அனைத்துக் கட்டுப்பாடுகளையும் தகர்த்தெறிந்துவிட்டோம்.

உலகில் செய்திகளையும், தகவல்களையும் பரிமாற்றிக்கொள்ள தனிநபர் இணைய சுதந்திரம் கட்டாயம் காணப்படவேண்டும். அமெரிக்கா போன்ற நாடுகளில் இவ்வாறு பூரண சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் முன்னேற்றகரமான ஏற்பாடுகளைச் செய்துள்ளார். சர்வதேச தலைவர்கள் தகவல் பரிமாற்றத்திற்கு அதியுச்ச பாதுகாப்புடன் கூடிய இணைய சுதந்திரம் காணப்பட வேண்டும்.

தொழில்நுட்ப விருத்தியின் காரணமாக 2011ஆம் ஆண்டு அல்குவைதா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடன் இருக்கும் இடத்தை அமெரிக்காவால் கண்டுபிடிக்க முடிந்திருந்தது.

நிலைபேண்தகு அபிவிருத்திக்கு இணைய உலகம் விரிவடைய வேண்டும். எனினும், இணையத்தள உலகம் தீவிரவாதம் மற்றும் சைபர் தாக்குதல்களால் கடும் அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாகுகின்றது.

ஐ.நாவில் நிலைபேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்ள உலகில் அனைத்து நாடுகளும் கைகோத்து இணைய பாதுகாப்புகளைப் பலப்படுத்திக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இப்போ மஹிந்த ஆட்சி காலத்தில் மாதிரி இல்லை.. இலங்கையர்களுக்கு இணையம் பாவிக்க பூரண தனிப்பட்ட சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இப்போ  மஹிந்த ஆட்சி காலத்தில் மாதிரி இல்லை.. இலங்கையர்களுக்கு  இணையம் பாவிக்க பூரண தனிப்பட்ட சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. Reviewed by Madawala News on 11/25/2017 12:20:00 AM Rating: 5