Kidny

Kidny

கல்முனை மாணவன் சஹாப்தீன் இன்சாப், நண்பர்களுடன் கடலில் குளிக்கச் சென்று காணவில்லை.


கல்முனையையடுத்துள்ள சாய்ந்தமருது கடலில் இன்று(11) சனிக்கிழமை குளிக்கச்சென்று கடலில்
மூழ்கிய சமயம் காணாமல் போன மாணவன் சஹாப்தீன் இன்சாப் (வயது 17) இன்னும் மீட்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலில் குளிக்கச்சென்ற 6 இளைஞர்களும் கல்முனை சாஹிறா கல்லுரியில் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடலில் மூழ்கி மீட்கப்பட்டுள்ள மாணவர்கள் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கல்முனை மாணவன் சஹாப்தீன் இன்சாப், நண்பர்களுடன் கடலில் குளிக்கச் சென்று காணவில்லை. கல்முனை மாணவன் சஹாப்தீன் இன்சாப், நண்பர்களுடன்  கடலில் குளிக்கச் சென்று காணவில்லை. Reviewed by Madawala News on 11/12/2017 01:04:00 AM Rating: 5