Kidny

Kidny

முதற் தர றகர் போட்டித் தொடர். 56 – 13 புள்ளி அடிப்படையில் இலங்கை விமானப்படையை துவம்சம் செய்தது கண்டி.


-ஜே.எம்.ஹபீஸ்-

முதற் தர கழகங்களுக்கிடையே இடம் பெற்று வரும் டயலொக் கேடய றகர் போட்டித் தொடரில்
பிரபல கண்டி விளையாட்டுக்கழகம் தொடந்தும் தனது வெற்றியை நிலைநாட்டி இவ்வாரப் போட்டியில் 56 – 13 என்ற அடிப்படையில் இலங்கை விமானப்படை விளையாட்டுக்கழக அணியை துவம்சம் செய்து வெற்றி பெற்றது.

(25.11.2017) புள்ளி அட்டவணையில் தொடர்ந்தும் முதலிடத்தை தக்கவைத்துள்ளது.

 கண்டி அணி மொத்தம் 9 ட்ரைகளைப் பெற்று அதில் 5 ற்கான மேலதிகப் புள்ளிகளையும் பெற்றது. இதன் மூலம் 55 புள்ளிகளைப் பெற்றது.

விமானப்படை விளையாட்டுக்கழகம் 2 பெனல்டிகளையும் ஒரு பெனல்டி ட்ரையையும் பெற்று 13 புள்ளிகளைப் பெற்றது.

கண்டி அணி சார்பாக திமித்ரி விஜேதுங்க, தரிந்து சத்துரங்க, பாசில் மரீஜா, ரிச்சர்ட் தர்மபால, அனுருத்த வில்வர, தனுஷ்க தயான், கயான் வீரரத்ன, ஸ்ரீநாத் சூரிய பண்டார, திலின விஜேசிங்க ஆகியோர் தலா ஒரு ட்ரை வீதம் வைத்தனர். அதில் 3 ற்கு மேலதிகப்புள்ளிகளை திலின விஜேசிங்கவும் 2 ற்கான மேலதிகப் புள்ளிகளை நைஜில் ரத்வத்தையும் பெற்றுக் கொடுத்தனர்.

விமானப்படை விளையாட்டுக்கழகம் சார்பாக பெறப்பட்ட 13 புள்ளிகளும் கயந்த இந்தமல்கொடை பெற்ற 2 பெனல்டிகள் மூலம் 6 புள்ளிகளும் மற்றைய 7 புள்ளிகள் பெனல்டி ட்ரை மூலம் அபராதப்புள்ளியாகவும் வழங்கப்பட்டது.

இதுவரை நடை பெற்ற 2017-18ம் பருவத்திற்கான சகல போட்டிகளிலும் கண்டி அணி வெற்றி பெற்று தோல்வியடையாத அணியாக தன்னை பதிவு செய்துள்ளது. புள்ளி அட்டவணையில் தொடர்ந்தும் முதலிடத்தை தக்கவைத்துள்ளது.



முதற் தர றகர் போட்டித் தொடர். 56 – 13 புள்ளி அடிப்படையில் இலங்கை விமானப்படையை துவம்சம் செய்தது கண்டி. முதற் தர  றகர் போட்டித் தொடர். 56 – 13 புள்ளி அடிப்படையில் இலங்கை விமானப்படையை துவம்சம் செய்தது கண்டி. Reviewed by Madawala News on 11/28/2017 09:52:00 AM Rating: 5