Kidny

Kidny

வீட்டிற்குள் வாள்களுடன் அட்டகாசம் செய்த கும்பல்.



பாறுக் ஷிஹான்-

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் புறூடி வீதியில் வசிக்கும் ஒருவரின் வீட்டிற்குள் நேற்று(4)  மாலை 5.45 மணியளவில் 
வாள்களுடன் புகுந்த இனம்தெரியாத கும்பல் ஒன்று உடமைகளை அடித்து நொறுக்கியதோடு வீட்டின் இருந்த பொருட்களிற்கு தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளது.


இவ்வாறு குறித்த வீடொன்றுக்குள் வாள்களுடன் புகுந்த 4 பேர் கொண்ட அக்கும்பல் வீட்டின் உடமைகளையும் , யன்னல்களையும் அடித்துடைத்ததுடன், பெற்றோல் ஊற்றி தீயிட்டுமுள்ளனர். அத்துடன் மகன் எங்கே என மிரட்டி வயோதிபர் ஒருவரையும் தாக்கிவிட்டு அந்தக் கும்பல் தப்பித்துள்ளது.

 இது தொடர்பில் வீட்டின் உரிமையாளர் கருத்து தெரிவிக்கையில் ,

"4 பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் எனது மகன் எங்கே? என மிரட்டி என்னைத் தாக்கினர். மகன் இல்லை என்றதும் வீட்டிலிருந்த பொருள்களை உடைத்து நாசம் செய்தனர். பெற்றோலும் ஊற்றி பெறுமதியான செற்றியை கொழுத்திவிட்டனர்" என தாக்குதலுக்குள்ளான வயோதிபர் தெரிவித்தார்.

இவ்வாறு தாக்குதலை மேற்கொண்ட கும்பல் முகத்தினை கறுப்புத் துணிகளினால் மூடிக் கட்டியவாறு இருந்தமையினால் எவரும் அடையாளம் கானமுடியவில்லை.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


வீட்டிற்குள் வாள்களுடன் அட்டகாசம் செய்த கும்பல். வீட்டிற்குள் வாள்களுடன் அட்டகாசம் செய்த கும்பல். Reviewed by Madawala News on 11/05/2017 10:18:00 AM Rating: 5