Kidny

Kidny

கேரளா கஞ்சாவுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது.


(ஹஸ்பர் ஏ ஹலீம்)

குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வடலிக் குளப் பகுதியில் 23 கிராம் கேரளா கஞ்சாவுடன்
குடும்பஸ்தர் ஒருவர் இன்று(17) கைது செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் குச்சவெளி வடலிக்குளப் பகுதியைச் சேர்ந்த முஹம்மது சரீப் பாமில் வயது(57) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து உரிய நபர் அவரது வீட்டிலிருந்தவாறே சோதனையிட்ட போது இடுப்பில் கேரளா கஞ்சா வைத்திருந்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டதாகவும் திருமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.ஐ.ஜனோசன் தெரிவித்தார்.

திருமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.ஐ.ஜனோசன் தலைமையிலான குழுவினரான அத்துகோரள12793,தௌபீக்53776,சம்பத்13675,வன்னிநாயக்க79129,இந்திக13675,டகெதர ஜயசிங்க80836,பெண்பொலிஸார் பரமேஸ்வரி6023 போன்றோர்களின் ஒத்துழைப்புடனும் கைது செய்யப்பட்டதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.


கைது செய்யப்பட்ட நபரை குச்சவெளி பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிகமாக நீதிமன்றத்துக்கு ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
(படத்தில் : போலீசார் மற்றும் பிடிபட்ட கஞ்சா)
கேரளா கஞ்சாவுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது.  கேரளா கஞ்சாவுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது. Reviewed by Madawala News on 11/17/2017 02:22:00 PM Rating: 5