Kidny

Kidny

(வீடியோ இணைப்பு) சர்வதேச அளவில் பேசப்படும் இலங்கை கிரிக்கட் வீரர்.


சர்வதேச அளவில் தரமான சுழல் பந்து வீச்சாளர்களை கிரிக்கெட் உலகுக்கு இலங்கை அணி தந்திருக்கின்றது. அதில் முத்தையா முரளிதரன் முதன்மையானவராக இருக்கின்றார்.

அந்த வகையில் தற்போது இலங்கையை சேர்ந்த மற்றுமொரு சுழல் பந்து சர்வதேச அளவில் பேசப்படுவதுடன், இணையத்தளங்களிலும் பிரபல்யமடைந்துள்ளார்.

மலேசியாவில் இடம்பெற்றுவரும் இளையோருக்கான ஆசிய கிண்ண போட்டிகளில் கலந்துகொண்டுள்ள, கெவின் கொத்திகொடே என்ற வீரரே தற்போது பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

காலி, மகிந்த வித்தியாலயத்தை சேர்ந்த கெவின் கொத்திகொடே என்ற வீரர் இப்போது சமூக ஊடகங்களில் வித்தியாசமான பந்துவீச்சு முறையால் வைரலாகியிருக்கிறார்.



இலங்கை அணியின் எந்தவொரு சிரேஸ்ட வீரரது சாயலும் இன்றி, தென் ஆப்பிரிக்காவின் போல் ஆடம்ஸின் பந்துவீச்சு சாயலில் இவரது பந்து வீச்சு அமைந்திருக்கின்றது.

போல் ஆடம்ஸ் இடதுகையால் பந்து வீசுபவர், இவர் வலது கையால் அதே சாயலில் லெக் ஸ்பின் பந்து வீச்சில் அசத்துகின்றமை சிறப்பம்சமாகும். இவர் ஒரு மிகசிறந்த களத்தடுப்பாட்டக்காரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன், சிறந்த துடுப்பாட்ட பங்களிப்பையும் வழங்கக்கூடியவர். இலங்கை கிரிக்கெட் அணியில் இவருக்கு ஒரு பிரகாசமான எதிர்காலம் அமையும் என்றே பேசப்படுகின்றது.

கெவின் அறிமுகமான ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில், இலங்கை அணி 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் கெவின் ஒரு விக்கெட் வீழ்த்தினார். வித்தியாசமான பந்துவீச்சில் பலரின் கவனத்தை ஈர்த்த அவர், இலங்கை அணிக்காகவும் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
(வீடியோ இணைப்பு) சர்வதேச அளவில் பேசப்படும் இலங்கை கிரிக்கட் வீரர். (வீடியோ இணைப்பு) சர்வதேச அளவில் பேசப்படும் இலங்கை கிரிக்கட் வீரர். Reviewed by Madawala News on 11/14/2017 06:32:00 AM Rating: 5