Kidny

Kidny

சாய்ந்தமருதின் அரசியலுக்கு தலைமைத்துவம் வழங்க ஜும்ஆ பெரியபாள்ளிவாசல் முன்வந்திருப்பது பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய நிகழ்வு.


சாய்ந்தமருதின்  அரசியலுக்கு  தலைமைத்துவம் வழங்க ஜும்ஆ பெரியபாள்ளிவாசல் முன்வந்திருப்பது
பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய ஒரு நிகழ்வாகும்.இந் நிகழ்வு ஏனைய முஸ்லிம் ஊர்களுக்கும் முன்மாதிரியான செயற்பாடாக அனைவராலும் பார்க்கப்படுகிறது.

இவ்வளவு காலமும் ,அரசியல் வேறு ,ஆன்மீகம் வேறு என்றிருந்தநிலையில் காலகாலமாக அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் வெற்றிகளுக்காக பல வாக்குறுதிகளை தம் இஸ்டம்போல் அள்ளிவீசி வாக்குகளைக் கொள்ளையடித்துச் சென்றதேயொழிய மக்கள் பிரச்சினைகள் கடுகளவும் குறையாமல் அதிகரித்தே வந்துள்ளது.இதன்மூலம் பல தடவைகள் ஏமாற்றப்பட்டு அரசியல் அநாதைகளாக்கப்பட்ட மக்களுக்கு புதிய தலைமைத்துவத்தின் தேவை ஏற்பட்டமை நியாயமானது.

அந்தவகையில் ,சாய்ந்தமருதின் அரசியல் களம்  புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது. எந்தக் கட்சிகளின் பின்னாலும் ஆட்டு மந்தைகள்போன்று அழைந்து  திரியாமல் ,தமதுரிமையை தன்மானத்துடன் தலைநிமிர்ந்து கேட்டுப் பெற்றிடக்கூடிய நிலைக்கு கட்சிகளைத் துறந்த பொதுத் தலைமையொன்றை இப்போது சாய்ந்தமருது மண் பெற்றுள்ளது.

உலமாக்கள் இறைவனுக்கு கட்டுப்பட்டு    மக்களை நேர்வழிப்படுத்தக்கூடியவர்கள்  என்பதாலும், இறையச்சத்துடன்  பள்ளிவாசலோடு , அதிகம் நெருக்கமாக இருப்பதாலும் சமூகம் தொடர்பான அரசியல் முடிவுகளை நேர்மையாக எடுப்பதற்கு பூரணதகுதி அவர்களுக்கு உண்டு என மக்கள் நம்புகின்றனர். சமூகத்தினுடைய அரசியல் உரிமைகள், சமூகப் பிரச்சினைகள், பிரதேசத்தினுடைய அபிவிருத்தி போன்றவற்றை மக்களுடன் கலந்தாலோசித்து தீர்க்கமான முடிவுகளை எடுத்து உரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு ஊர் சார்பில் இவ்வாறான  கூட்டுப்பொறுப்புமிக்க தலைமைத்துவம் காலத்தின் தேவையாகும்.


ஆக்கம் By ABM.azeem Sainthamaruthu
சாய்ந்தமருதின் அரசியலுக்கு தலைமைத்துவம் வழங்க ஜும்ஆ பெரியபாள்ளிவாசல் முன்வந்திருப்பது பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய நிகழ்வு. சாய்ந்தமருதின்  அரசியலுக்கு  தலைமைத்துவம் வழங்க ஜும்ஆ பெரியபாள்ளிவாசல் முன்வந்திருப்பது பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய  நிகழ்வு. Reviewed by Madawala News on 11/05/2017 10:54:00 PM Rating: 5