Kidny

Kidny

இலங்கையில் பல ''வெட்டுக்களை'' சந்தித்த லூஷன் கூறும் கதைகள்.


தென் கொரியாவில் இடம்பெற்ற ஆசிய ஆணழகன் போட்டியில் முதலிடம் வென்றவர் லூஷன்
புஸ்பராஜ்.

இவர் எதிர்வரும் 25ம் திகதி அமெரிக்காவின் டெக்ஸ்சாஸில் நடைபெறவுள்ள "மிஸ்டர் அன்ட் மிஸ் அட்லஸ்" போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றார்.

இந்தப் போட்டியில் கலந்து கொள்வது குறித்து,  அளித்த செவ்வியில், "மிஸ்டர் அட்லஸ் கிண்ணத்தை எனது தாய் மண்ணுக்கு வென்று கொடுப்பேன்" என, லூஷன் புஸ்பகுமார, கூறியுள்ளார்.

இதேவேளை, இலங்கை உடற்கட்டமைப்பு சம்மேளனம் அவருக்கு காட்டிய பாரபட்சங்கள் குறித்தும் அவர் இதன்போது மனம் திறந்துள்ளார்.

தான் மிஸ்டர் அட்லஸ் போட்டிக்காக அமெரிக்கா செல்வதைத் தடுக்கும் நோக்கில் அவர்கள், நடவடிக்கைகள் மேற்கொண்டதாகவும், இதனால் தனக்கு விசா மறுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் பின்னர் தனது அனுசரணையாளர்கள் மீண்டும் தனக்கு விசாவை பெற்றுக் கொடுக்க கடும் பிரயத்தனத்தை மேற்கொண்டதாகவும் லூஷன் தெரிவித்துள்ளார்.

மிஸ்டர் அன்ட் மிஸ் அட்லஸ் போட்டியை ஒழுங்கு செய்யும் "க்ளோபல் பொடிபில்ட் பெடரேசன்" தன்னிடம் வினவிய கேள்விகளில் இருந்து அது தௌிவானதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர்கள் தன்னிடம் "நீங்கள் இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளீர்களா.. போன்ற பல கேள்விகளை வினவினர், ஆனால் இந்த தடை, குற்றச்சாட்டுக்கள் குறித்து பேசுவது மற்றும் தெரிந்து வைத்திருப்பது ஶ்ரீ லங்காவின் பெடரேஷன் மட்டுமே, எனவே, எனக்கு நன்கு நம்பிக்கை உள்ளது அவர்கள் தான் இப்போது என் காலை வாருவது என்று" எனக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் லூஷனுக்கு அமெரிக்கா செல்ல தற்போது விசா கிட்டியுள்ளது. எனவே, தனது அனுசரணையாளருக்கு தான் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், "நான் நிச்சயம் இந்தப் போட்டியில் வெல்வேன், எனக்கு நூற்றுக்கு நூறு வீதம் நம்பிக்கையுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று என் தாய் மண்ணுக்கு நான் மீண்டும் புகழ் சேர்ப்பேன்" என லூஷன் புஸ்பராஜ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் பல ''வெட்டுக்களை'' சந்தித்த லூஷன் கூறும் கதைகள். இலங்கையில் பல ''வெட்டுக்களை'' சந்தித்த லூஷன் கூறும் கதைகள். Reviewed by Madawala News on 11/20/2017 04:44:00 PM Rating: 5