Ad Space Available here

பால் பக்கற்றுகளுக்கும் சீனி வரி அறவிட வேண்டும்.


பால் பக்கற்றுகளில் உள்ளடங்கியுள்ள சீனியின் அளவை காட்சிப்படுத்தவும், மென்பானங்களுக்கு விதிக்கப்படுவது போன்று வரி விதிக்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மக்களின் சுகாதாரத்திற்கு பாதிப்பான இத்தகைய உற்பத்திகள் தொடர்பில் எதிர் காலத்தில் கடுமையான நடவடிக் கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.


உலகநீரிழிவு தினத்தை முன்னிட்டு நேற்று (12) முற்பகல் கொழும்பு காலிமுகத்திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய நீரிழிவு தின நடைபவனி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இங்கு பேசிய அவர்:


உலகில் பெரும்பாலானவர் கள் பாதிக்கப்பட்டுள்ள தொற்றா நோய்களில்
முக்கிய நோயான நீரிழிவை கட் டுப்படுத்துவதற்கு தேசிய நிகழ்ச்சித் திட்டமொன்று அவசியம்.

நீரிழிவு நோய் தொடர்பாக மக்களை அறி வூட்ட நீரிழிவுநோய் மாதமொன்றை பிரகடனப்படுத்த வேண்டும்.

வைத்தியசாலைகள், மருத்துவர் கள் மற்றும் ஊழியர்களின் பங்குபற் றுதலுடன் இம்மாதத்தில் தேசிய நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது அவசியம். பால்பக்கெற்றுகளில் உள்ளடங்கியுள்ள சீனியின் அளவை காட்சிப்படுத்துவதற்கு கடந்த வரவுசெலவுத் திட்டத்தில் மென் பானங்களுக்கான வரி முன்மொழி யப்பட்டுள்ளது.

மக்களின் சுகாதாரத்திற்கு பாதிப்பான இத்தகைய உற்பத்திகள் குறித்து எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

சுகாதாரஅமைச்சின் தொற்றாநோய் பணியகம், இலங்கை நீரிழிவு பேரவை ஆகியன இணைந்து இந்த நடைபவனி ஏற்பாடு செய்தன.

நடைபவனியில் காலிமுகத்திடலுக்கு வந்த ஜனாதிபதி, அங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கண் காட்சியை திறந்துவைத்து பார்வை யிட்டார்.

தேசிய நீரிழிவு தினத்தை முன் னிட்டு தயாரிக்கப்பட்ட ஆரோக்யா சஞ்சிகை வைத்தியர் நொயெல் சோமசுந்தரவினால் ஜனாதிபதியி டம் கையளிக்கப்பட்டது.


அமைச்சர் ராஜிதசேனாரத்ன, பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந் தர, நீரிழிவு பேரவையின் தலைவர் வைத்திய நிபுணர் பிரசாத் கட்டுலந்த மற்றும் வைத்தியர் மணில்க சுமன திலக உள்ளிட்ட வைத்தியர்கள், அரசாங்க அதிகாரிகள் பெரும் எண் ணிக்கையான பொதுமக்கள் இந்நி கழ்வில் கலந்து கொண்டனர்.

பால் பக்கற்றுகளுக்கும் சீனி வரி அறவிட வேண்டும். பால் பக்கற்றுகளுக்கும் சீனி வரி அறவிட வேண்டும். Reviewed by Madawala News on 11/13/2017 12:17:00 PM Rating: 5